Asianet News TamilAsianet News Tamil

கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டி..! வேட்பாளரை அறிவித்த எடப்பாடி

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடுவதாக அறிவித்த எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளரையும் அறிவித்துள்ளார்

Edappadi Palaniswami has announced the name of the AIADMK candidate for the Karnataka assembly elections
Author
First Published Apr 19, 2023, 10:54 AM IST

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் மே பத்தாம் தேதி நடைபெறுகிறது இந்த தேர்தலில் காங்கிரஸ்,பாஜக இடையே கடுமையான போட்டி உருவாகியுள்ளளது. பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தது. இந்த நிலையில் தனித்து போட்டியிடுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

Edappadi Palaniswami has announced the name of the AIADMK candidate for the Karnataka assembly elections

இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 10.5.2023 அன்று நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், புலிகேசி நகர் (159) சட்டமன்றத் தொகுதியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக திரு. D. அன்பரசன் அவர்கள் கர்நாடக மாநிலக் கழக அவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்வதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்

Follow Us:
Download App:
  • android
  • ios