அதிமுகவில் ஐடி விங் எனப்படும் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோபத்துடன் கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் முகாமிட்டு இருந்தார். திருப்பரங்குன்றம் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்த அவர் திடீரென அதிமுகவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் ராஜத்தை அழைத்து ஒரு மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார். துவக்கம் முதலே ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்வதாக சத்தியம் கூறிவந்ததை நினைவில் வைத்தே எடப்பாடி இதனை தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து மதுரையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆலோசனை கூட்டம் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது. குறுகிய கால அவகாசமே இருந்த நிலையிலும் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் என அனைவரையும் வரவழைத்து அசத்தினார் ராஜ் சத்தியன். மதுரையில் போட்டியிட ராஜ் சத்தியன் கிட்டத்தட்ட தகராறு செய்தே வாய்ப்பு வாங்கியதாக ஒரு பேச்சு உண்டு.

 இதனால் ராஜ் சத்யன் மற்றும் அவரது தந்தை ராஜன்செல்லப்பா மீது அதிமுக மேலிடம் அதிர்ச்சியில் இருப்பதாகவும் பேச்சுக்கள் உலா வந்தன. இந்த நிலையில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு கூட்டத்தின் மூலமாக எடப்பாடியை தாஜா செய்து விடலாம் என்று ராட்சதன் கணக்குப் போட்டிருந்தார். அதன்படி கூட்டத்தில் கணிசமான அளவிற்கு தகவல் தொழில்நுட்பப் பிரிவு உறுப்பினர்களை வரவழைத்து எடப்பாடி பழனிச்சாமி முகத்தில் சிரிப்பை வரவழைத்து இருந்தார். கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி தூக்கத்தில் அனைவரையும் பாராட்டையும் வாழ்த்தையும் வழக்கம் போல் பேசினார். ஆனால் கடைசியில் திமுகவிடம் ஒப்பிடுகையில் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மிகவும் பின்னடைவான நிலையில்தான் இருக்கிறது என்ற உண்மையை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறி குண்டு போட்டார். நேற்று கட்சி தொடங்கிய கமல் கூட சமூக வலைதளங்களில் வலுவான ஒரு கட்டமைப்பை உருவாகியுள்ள நிலையில் அதிமுகவிற்கு தற்போது வரை அப்படி ஒரு கட்டமைப்பு உருவாகவில்லை என்பது தனக்கு தெரியும் என்றும் கூறி அதிர வைத்தார். கோடநாடு விவகாரமாக இருந்தாலும் சரி பொள்ளாச்சி பிரச்சனையாக இருந்தாலும் சரி சமூக வலைதளங்களில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சிறப்பாக செயல்பட்டு இருந்தால் திமுகவின் சதியை அம்பலப்படுத்தி இருக்க முடியும் என்றும் எடப்பாடி தெரிவித்துள்ளார். ஆனால் உளவுத்துறையினர் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் இந்த பிரச்சனைகளை எல்லாம் நானும் அமைச்சர்களும் தான் சரி செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். 

ஆனால் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு புதிது புதிதாக பிரச்சினைகளை உருவாக்கி நமக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஸ்டாலின் எந்த சிக்கலும் இல்லாமல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருந்ததையும் எடப்பாடி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தவறுகளை எல்லாம் சரி செய்து அடுத்த கட்டத்திற்குச் செல்ல என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்வதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும் தேவையான உதவிகளை அரசும் சரி அதிமுகவும் சரி அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செய்யும் என்றும் கூறி பேச்சை முடித்து உள்ளார்.