Asianet News TamilAsianet News Tamil

எதிலும் நிலையான முடிவு எடுக்க முடியாத நிர்வாக திறனற்ற விடியா அரசு! ஆளுங்கட்சியை அலறவிடும் இபிஎஸ்.!

பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மட்டுமே மதுபானம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்களிலும் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை பரிமாறலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

edappadi palanisamy slams MK Stalin
Author
First Published Apr 25, 2023, 2:44 PM IST | Last Updated Apr 25, 2023, 2:46 PM IST

எதிலும் நிலையான முடிவு எதுவும் எடுக்கமுடியாத இந்த அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளவாது மிகுந்த வேதனைக்குரியது, கடுமையாக கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மட்டுமே மதுபானம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்களிலும் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை பரிமாறலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து  திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு ஒருபோதும் அனுமதியில்லை, ஐபிஎல் போன்ற சர்வதேச நிகழ்வுகளில் மட்டுமே மதுபானங்களுக்கு அனுமதி எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்திருந்தார்.

edappadi palanisamy slams MK Stalin

இதனையடுத்து,  தொழிலாளர் 12 மணி நேர வேலை என்ற மசோதா அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்தது. பின்னர், தொழிலாளர் நலத்துறையின் சட்டமுன்வடிவு மீதான செயலாக்கம் நிறுத்திவைக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில்,  திறனற்ற அரசு இனிவரும் காலங்களிலாவது, கார்ப்பரேட் நலனை மட்டுமே மனதில் கொள்வதை விடுத்து, மக்கள் நலனை மனதில் நிறுத்தி அவர்களின் வாழ்வியலுக்கு உகந்த கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டுமென என இபிஎஸ் தெரிவித்துள்ளார். 

edappadi palanisamy slams MK Stalin

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தொழிலாளர் 12 மணி நேர வேலை என்ற மசோதா அறிவித்து பின்னர் நிறுத்தி வைப்பு, திருமண மண்டபங்களில் மதுபானம் வழங்கும் உரிமத்தை அறிவித்து பின்னர் ரத்து, பள்ளி கல்வி துறையில் LKG வகுப்பு ரத்து என்ற அறிவிப்பு வெளியிட்டு மீண்டும் அதனை கொண்டு வந்தது என எதிலும் நிலையான முடிவு எதுவும் எடுக்கமுடியாத இந்த அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளவாது மிகுந்த வேதனைக்குரியது, கடுமையாக கண்டிக்கத்தக்கது. 

edappadi palanisamy slams MK Stalin

இந்த நிர்வாக திறனற்ற அரசு, இனிவரும் காலங்களிலாவது, கார்ப்பரேட் நலனை மட்டுமே மனதில் கொள்வதை விடுத்து, மக்கள் நலனை மனதில் நிறுத்தி அவர்களின் வாழ்வியலுக்கு உகந்த கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டுமென மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios