Asianet News TamilAsianet News Tamil

அவங்களைப்போல அரைவேக்காடு தனமாக அறிக்கை வெளியிட முடியாது.. ஆளுங்கட்சியை எகிறி அடிக்கும் எடப்பாடியார்.!

500 ஆண்டுகாலம் நடைபெற்ற அந்த இந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக அரசு அதை தடை செய்ய முயற்சி செய்தது அதை கண்டித்து நாங்கள் குரல் கொடுத்தோம். தமிழகத்தில் ஆளும் கட்சியைத் தவிர மற்ற அனைத்துமே எதிர்க்கட்சிகள் தான். ஆனால் அதிமுகவை பிரதான எதிர்கட்சி என்றார்.

Edappadi palanisamy slams dmk government
Author
Mayladuthurai, First Published Jun 10, 2022, 10:42 AM IST

ஆதீனங்கள் விவகாரத்தில் தேவையற்ற தலையீட்டை அரசு தவிர்க்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

மயிலாடுதுறையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தருமபுர ஆதீனத்தை சந்தித்து அருளாசி பெற்றார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கியது அதிமுக அரசு தான். அதிமுக ஆட்சியில் டெல்டா பாசன விவசாயிகளுக்கு ஏராளமான நன்மைகள் கிடைத்தது. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான கையெழுத்திட்டது திமுக. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அதிமுக அரசு. இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு அதிகளவு இழப்பீட்டு தொகை வழங்கிய அரசு அதிமுக அரசுதான் என பெருமிதம் கொண்டார். 

Edappadi palanisamy slams dmk government

50 ஆண்டு கால காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு பெற்றது அதிமுக அரசு. சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரசு ஆய்வு குறித்து குறித்து அறிக்கை அளிக்காதது ஏன்  என்ற கேள்விக்கு மதம்,கோவில் சம்பந்தப்பட்டது. முழு விவரம் தெரிவிக்கப்பட்ட பின்னர்தான் அறிக்கை வெளியிட முடியும். இது அவர்களைப்போல அரைவேக்காடு தனமாக அறிக்கை வெளியிடக் முடியாது. எல்லா மதமும் சமமாக பார்க்க வேண்டும். மதத்திற்குள் யாரும் நுழையக்கூடாது. ஆண்டாண்டு காலமாக அவர்கள் வழிமுறையில் நாம் தலையிடக் கூடாது, கோவிலுக்கு என்று என்று வழிமுறைகள் இருக்கிறது. அதற்கென்று சட்டரீதியாக பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதனால் ஆய்வு செய்த பிறகுதான் அறிக்கை வெளியிட முடியும் என்றார். 

Edappadi palanisamy slams dmk government

ஆதினத்தில் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த அரசாங்கம் அதில் மூக்கை நுழைக்க பார்க்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது வருந்ததக்கது. இதற்கு முன் திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் தருமபுர ஆதீனத்தில் பட்டனை பிரதேசங்கள் நடைபெற்று வந்தது. 500 ஆண்டுகாலம் நடைபெற்ற அந்த இந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக அரசு அதை தடை செய்ய முயற்சி செய்தது அதை கண்டித்து நாங்கள் குரல் கொடுத்தோம். தமிழகத்தில் ஆளும் கட்சியைத் தவிர மற்ற அனைத்துமே எதிர்க்கட்சிகள் தான். ஆனால் அதிமுகவை பிரதான எதிர்கட்சி என்றார்.

Edappadi palanisamy slams dmk government

மேலும், திமுக அரசு பொதுமக்களை பற்றி சிந்திக்கவில்லை. திமுக அரசு செயலற்ற அரசாகவே உள்ளது. மக்களை பற்றி சிந்திக்காமல் தனது குடும்பம் செழிக்க வேண்டுமென மட்டுமே திமுக அரசு செயல்படுகிறது. சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios