Asianet News TamilAsianet News Tamil

ப.சிதம்பரம் இருப்பது பூமிக்குத்தான் பாரம்... முதல்வர் பழனிசாமி ஆவேசம்..!

மத்திய அரசு நாளை தமிழகத்தை யூனியன் பிரதேசமாக ஆக்கினால் அதிமுக கைக்கட்டி, தலை வணங்கி நிற்கும் என ப.சிதம்பரம் கூறியிருக்கிறாரே என கேள்வி எழுப்பினர். இதற்கு ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும், நாட்டுக்கும் என்ன கிடைத்தது? அவரால் பூமிக்குத்தான் பாரம் என்று முதல்வர் பழனிசாமி கடுமையாக விமர்சித்து பதிலடி கொடுத்துள்ளார். 

Edappadi Palanisamy Slams congress leader chidambaram
Author
Tamil Nadu, First Published Aug 13, 2019, 11:43 AM IST

பல ஆண்டுகளாக மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தால் நாட்டுக்கு என்ன பயன்? அவரால் பூமிக்குத்தான் பாரம் என முதல்வர் பழனிசாமி ஆவேசமாக கூறியுள்ளார். 

கர்நாடகத்தின் குடகு மாவட்டத்திலும், கேரளாவின் வயநாடு பகுதியிலும் தொடர்ந்து பெய்த பலத்த மழையின் காரணமாக மைசூரு அருகே உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கும் மற்றும் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மேட்டூர் அணை வேகமாக நிரம்பி முழுகொள்ளளவை எட்டியது. இதன் மூலம் 65-வது முறையாக 100 அடியை கடந்தது. Edappadi Palanisamy Slams congress leader chidambaram

இதையடுத்து, விவசாயிகள் நலன் கருதி பாசனத்துக்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார். அதன்படி, இன்று சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி, காவிரியாற்றில் மலர்தூவினார். நீர் வரத்தை பொறுத்து நீர்திறப்பு படிப்படியாக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்படும் என்றார். Edappadi Palanisamy Slams congress leader chidambaram

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இறைவன் அருளால் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மீது அக்கறை கொண்டது தமிழக அரசு. இன்றைய மேட்டூர் அணை 20 மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. மேட்டூர் அணை திறப்பு மூலம் டெல்டா பகுதியில் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். கால்வாய் பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். மேலும், கோதாவரி - காவிரி நதிகள் இணைக்கப்படுவது உறுதி. கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பால் தமிழகத்தில் 125 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும் என்றார். Edappadi Palanisamy Slams congress leader chidambaram

இதனிடையே, செய்தியாளர்கள் மத்திய அரசு நாளை தமிழகத்தை யூனியன் பிரதேசமாக ஆக்கினால் அதிமுக கைக்கட்டி, தலை வணங்கி நிற்கும் என ப.சிதம்பரம் கூறியிருக்கிறாரே என கேள்வி எழுப்பினர். இதற்கு ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும், நாட்டுக்கும் என்ன கிடைத்தது? அவரால் பூமிக்குத்தான் பாரம் என்று முதல்வர் பழனிசாமி கடுமையாக விமர்சித்து பதிலடி கொடுத்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios