Asianet News TamilAsianet News Tamil

இந்த முறை அவங்க லாபி வேலைக்கு ஆகாது..! கொக்கரிக்கும் ஓபிஎஸ்..! கலக்கத்தில் இபிஎஸ்..!

இந்த முறை டெல்லியில் எடப்பாடி லாபி வொர்க் அவுட் ஆகாது என்று தனது ஆதரவாளர்களிடம் நக்கலாக பேசி வருகிறாராம் ஓ.பன்னீர் செல்வம்.

Edappadi palanisamy shock
Author
Tamil Nadu, First Published Jun 15, 2019, 10:23 AM IST

இந்த முறை டெல்லியில் எடப்பாடி லாபி வொர்க் அவுட் ஆகாது என்று தனது ஆதரவாளர்களிடம் நக்கலாக பேசி வருகிறாராம் ஓ.பன்னீர் செல்வம்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு டெல்லி – எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு இடையே ஏற்பட்ட கசப்புணர்வு தற்போது வரை தீர்ந்தபாடில்லை. டெல்லி சென்று அமித் ஷாவை இரண்டு அமைச்சர்கள் சந்தித்து வந்த பிறகும் எடப்பாடிக்கு இனிப்பான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து ஆளுநரை சந்தித்து பேசிய போதும் கூட எடப்பாடிக்கு சாதகமான எந்த விஷயமும் நடைபெறவில்லை. Edappadi palanisamy shock

இந்த நிலையில் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். அங்கு மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து சமாதானம் பேசலாம் என்பது தான் எடப்பாடியின் பிளான். மேலும் இந்த சந்திப்பின் மூலமாக மனக்கஷப்புகளை சரி செய்து முதலமைச்சர் பதவியில் சிக்கலின்றி நீடிக்கும் வியூகத்தையும் அவர் வகுத்துள்ளார். Edappadi palanisamy shock

ஆனால் நிலைமை முன்பு போல் இல்லை எடப்பாடி தரப்பு தேர்தலின் போது செய்த சில உள்ளடி வேலைகளை ஆதாரத்துடன் அமித் ஷா கைப்பற்றி வைத்துள்ளதாகவும் எனவே எடப்பாடிக்கு டெல்லியில் அதிர்ச்சி காத்திருப்பதாகவும் ஓபிஎஸ் தரப்பு பேசிக் கொள்கிறது. ஏற்கனவே அதிமுகவில் யார் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதை அமித் ஷா தீர்மானித்துவிட்டதாகவும் அவர்கள் குண்டு போடுகிறார்கள். Edappadi palanisamy shock

இதனால் தான் எங்கள் அய்யா உற்சாகமாக இருப்பதாகவும் கூறித் திரிகிறார்கள் ஓபிஎஸ் தரப்பு. இது குறித்து அவர்களிடம் பேசிய போது முதலமைச்சர் பதவியை இரண்டு ஆண்டுகள் எடப்பாடி – இரண்டு ஆண்டுகள் ஓபிஎஸ் என்று உடன்பாடு செய்தே இரு அணிகளையும் இணைத்தோம், ஆனால் 2 ஆண்டுகள் ஆன பிறகும் எடப்பாடி பதவி விலக மறுக்கிறார். மேலும் தேர்தல் சமயத்தில் அவர் காங்கிரசுக்கு சாதகமாக சில விஷயங்களை செய்துள்ளதாக பாஜக சந்தேகிக்கிறது. Edappadi palanisamy shock

இதை எல்லாம் எங்கள் ஓபிஎஸ் அய்யா மிக கவனமாக எதிர்கொண்டு வருகிறார். விரைவில் பாருங்கள் நாங்கள் தான் முதலமைச்சர் பதவியை அலங்கரிக்கப்போகிறோம், அதுமட்டும் அல்ல விரைவில் ரவீந்திரநாத்தும் மத்திய அமைச்சர் ஆவார் என்று கொக்கரித்தபடியே கூறுகின்றனர். அதாவது ஓபிஎஸ் பேசுவது போலவே பேசிச் செல்கின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios