Asianet News TamilAsianet News Tamil

இனி பேரறிவாளன் நளினி தலைவிதி எடப்பாடி கையில்!! தமிழக அரசு முடிவு செய்ய கோர்ட் உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுப் செய்யப்பட்டு தங்கள் வாழ்க்கையில் பெரும் பகுதியை சிறையிலேயே கழித்திருக்கும் பேரறிவாளன், நளினி, முருகன் , சாந்தன், ராபர்ட் ஃபயஸ், ரவிச்சந்திரன் , ஜெயக்குமார் ஆகிய ஏழு பேருக்கும் விடுதலை வழங்கும் விஷயம் தொடர்ந்து இழுபறியாகவே இருந்து வருகிறது. 

Edappadi palanisamy responsibilities for Perarivalan and nalini
Author
Chennai, First Published Sep 6, 2018, 12:53 PM IST

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுப் செய்யப்பட்டு தங்கள் வாழ்க்கையில் பெரும் பகுதியை சிறையிலேயே கழித்திருக்கும் பேரறிவாளன், நளினி, முருகன் , சாந்தன், ராபர்ட் ஃபயஸ், ரவிச்சந்திரன் , ஜெயக்குமார் ஆகிய ஏழு பேருக்கும் விடுதலை வழங்கும் விஷயம் தொடர்ந்து இழுபறியாகவே இருந்து வருகிறது. 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் இந்த 7 பேரையும் விடுதலை செய்யும் உரிமை , மாநில அரசுக்கு இல்லை என்றே இத்தனை காலமும் மறுக்கப்பட்டு வந்தது. 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்ய ஒப்புதல் தர வேண்டும் இல்லை என்றால் 3 தினங்களில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 7 பேருமே விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவித்திருந்தார். 

ஆனால் அந்த வழக்கு உச்ச நீதி மன்றத்திடம் மேல் முறையீடு செய்யப்பட்டு ஜெயலலிதாவின் முயற்சி நிறைவேறாமல் போய்விட்டது. அதனை தொடந்து சில மாதங்களுக்கு முன்னர் கூட, நன்நடத்தை காரணமாக இவர்களை சிறையில் இருந்து  விடுதை செய்துவிடலாம் என சிறை அதிகாரிகள் தமிழக அரசிடம் பரிந்துரை செய்திருந்தனர்.

ஆனால் மாநில அரசுக்கு இந்த விஷயத்தில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என மறுக்கப்பட்டதால் அமைதி காத்து வந்தது அரசு. தற்போது இந்த  ராஜூவ் காந்தி கொலை வழக்கில், குற்றவாளிகள் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து, தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளது. இது சம்பந்தமாக தமிழக அரசு தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். என நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு உத்தரவிட்டிருக்கிறது.

இதனால் இனி இந்த 7 பேரின் விடுதலையை தீர்மானிக்கும் அதிகாரம் தமிழக அரசின் கைகளுக்கு வந்திருக்கிறது. இதனால் நளின், பேரறிவாளன் உட்பட 7 பேருக்கு விடுதலை வழங்குவது குறித்து எடப்பாடி தான் ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இந்த பரிந்துரையை செய்து அம்மாவின் ஆசைப்படி , 7 பேரையும் விடுதலை செய்வாரா எடப்பாடி என இனி தான் தெரியும். இதனால் தற்சமயம் பேரறிவாளன் நளினி தலைவிதி எடப்பாடி கையில் உள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios