அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதால் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா  நீக்கப்பட்டதால், தம்பியையே கட்சியில இருந்து நீக்கி ஓபிஎஸ் தன்னை நீதிதேவன் என்று நிருபித்து இருக்கிறார் ஏன் அதிமுகவினர் அதகளம் செய்து வந்தனர். 

ஆனால், ஆவின் தலைவர் பதவியை காட்சிப்பதவியை மட்டும் பறித்துவிட்டு, எடப்பாடி கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பக்கா பிளானோடு நாடகத்தை அரங்கேற்றி இருப்பதாக ஓபிஎஸ்ஸை புகழ்ந்த அதே வாய் பன்னீருக்கு எதிராக எடப்பாடியிடம் வத்தி வைத்து வருகிறதாம்.  

இதனால் கடுப்பில் இருந்த எட்டப்படியார்,  ஓபிஎஸ்சை ஓரங்கட்டினால்தான் கட்சிக்கு நல்லது, கொஞ்சம் மிஸ்ஸானால் மொத்தமாக ஆப்படித்துவிடுவார் என எடப்பாடி நினைக்கிறாராம், ஓபிஎஸ்ஸை வெளியில் அனுப்பினால், என்ன பிரச்சனைகள் வரும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசித்தாராம், அதுமட்டுமல்ல டெல்லி மேலிடத்திலும் தூது அனுப்பினாராம்,  இதற்கு டெல்லி மேலிடம் கிரீன் சிக்னல் காட்டி விட்டதாம்.  

ஒரு காலத்தில்  பாஜகவுடன் எடப்பாடியை விட நெருக்கமாக இருந்த ஓபிஎஸ்சை தற்போது பிஜேபி கழட்டிவிட்டது.  டெல்லி சொன்னதன் பேரில் எடப்பாடியும் ஓபிஎஸ்சை ஓரங்கட்ட தொடங்கிட்டாராம். எடப்பாடி மற்றும் பிஜேபியின் பிளான் தெரிந்த ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்க  தன்னுடைய ஆதரவாளர்களை திரட்டி வருகிறாராம்.   

கட்சிப்பதவியையும், துணை முதல்வர் பதவியையும் பறித்துக் கொண்டு வெளியில் அனுப்பினால் என்ன செய்வார் ஓபிஎஸ்? என ப்ரீ பிளான் போட்டிருக்கும் எடப்பாடி, ஓபிஎஸ்ஸை வெளியில் அனுப்புவதற்கு முன்பாக அவரின் மொத்த பிளானையும் முறியடித்துள்ளாராம்.