மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தேன் என நானே சொல்வது எனக்கே வெட்கமாக இருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனையுடன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பெரியண்ணன் அரசு இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின் இடஒதுகீட்டை முறையாக வகுத்து, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பதால் தான் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டதாகவும், உள்ளாட்சி தேர்தலை நிறுத்த திமுக முயற்சிப்பதாக முதல்வர் கூறுவது பொய் என்றும் கூறினார்.

தன்னோடு எம்எல்ஏ.வான ஸ்டாலின் இன்னும் எதிர்க்கட்சி தலைவராகவே இருப்பதாக முதல்வர் பழனிச்சாமி விமர்சித்தது பற்றி கூறிய ஸ்டாலின், நான் கருணாநிதி மகன், பதவிக்காக தன்மானத்தை விட்டுவிட்டு தன்னால் காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை பெற தெரியாது என்றார். உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழக அரசு முன்கூட்டியே பொங்கல் பரிசு வழங்குவதாக குற்றம்சாட்டினார்.

திமுக ஆட்சியில் ரேஷன் கார்டு வைத்திருந்த அனைவருக்கும் இலவச தொலைக்காட்சி கொடுக்கப்பட்டதாகவும், பொங்கல் பரிசை அனைத்து வகையான ரேஷன் கார்டு வைத்திப்பவர்களுக்கும் வழங்காதது ஏன் என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு துணிச்சலான உண்மைகளை அரசகுமார், வெளிப்படையாக கூறியுள்ளார். மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தேன் என நானே சொல்வது எனக்கே வெட்கமாக இருக்கிறது என மு.க.ஸ்டாலின் பேசினார்.