edappadi palanisamy meeting with dhanabal

நாளை சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் சபாநாயகர் தனபாலுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஒ.பி.எஸ்சிடம் இருந்து முதலமைச்சர் பதவி பிடுங்கப்பட்ட பிறகு 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதலாமைச்சராக பதவியேற்றார்.

ஆனால் எடப்பாடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அவருக்கு எதிராக தோப்பு வெங்கடாசலம் தலைமையில் தனி அணி உருவாகியது.

இதையடுத்து டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி விட்டு ஒ.பி.எஸ்சுடன் கூட்டு சேர வேண்டும் என எடப்பாடி தரப்பு திட்டமிட்டது.

ஆனால் சசிகலா குடும்பத்தை பிரித்து வைத்தால் தான் கூட்டணி என ஒ.பி.எஸ் அணியினர் ஸ்ட்ரிக்ட்டாக கூறி விட்டனர்.

பின்னர், தினகரனையும் எடப்பாடி அணி ஒதுக்கி வைப்பதாக அறிவித்தது. ஆனால் ஒ.பி.எஸ்சுடனான பேச்சுவார்த்தை இதுவரை இழுத்துக்கொண்டே செல்கிறது.

இரட்டை இலை விவகாரத்தில் தினகரன் சிறைக்கு சென்றதும் எடப்பாடி ஆட்சி பெரிதும் குளறுபடி இல்லாமல் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் தினகரன் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

இதையடுத்து அதிருப்தியில் இருந்த எம்.எல்.ஏக்கள் தினகரன் பக்கம் நகர்ந்து வருகின்றனர். இதுவரை 21எம்.எல்.ஏக்கள் தினகரனிடம் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதனால் கதிகலங்கியுள்ள எடப்பாடி சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் சபாநாயகர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது.