Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடியை சந்தித்த புகழேந்தி... காரணத்தை சொன்ன ஆச்சரியப்படுவிங்க போங்க..!

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புகழேந்தி மாமியார் வீடு சேலத்தில் இருப்பதால் அருகில் உள்ள முதல்வர் வீட்டுக்கும் சென்று தீபாவளி வாழ்த்து கூறினேன். ஆனால், அதிமுகவில் இணைய வரவில்லை. 2 இடைத்தேர்தல் தொகுதியில் மாபெரும் வெற்றியடைந்ததற்காக முதல்வர் பழனிசாமி இல்லத்துக்குச் சென்று அவரை சந்தித்து, இடைத்தேர்தல் வெற்றி குறித்து வாழ்த்தினேன்.

edappadi palanisamy meet AMMK pugazhendhi
Author
Tamil Nadu, First Published Oct 25, 2019, 2:30 PM IST

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுகவில் கர்நாடக மாநில பொறுப்பாளராக இருந்த புகழேந்தி ஜெயலலிதா மறைக்கு பின்னர் டிடிவி.தினகரனுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சமீபத்தில் டி.டி.வி. தினகரனுடன் புகழேந்திக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து, கோவையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் கட்சியினருடன் புகழேந்தி பேசிய வீடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் இங்கு யாருடனும் இருக்கும் விருப்பம் எனக்கு இல்லை. டிடிவியை ஊர் ஊராகச் சென்று நான் தான் அடையாளப்படுத்தினேன். ஆனால், ஜெயலலிதா மரணத்தில் கூட அவர் உடன் இல்லை. இதனால் விரைவில் ஒரு நல்ல முடிவு எடுப்பேன் என கூறியிருந்தார். 

edappadi palanisamy meet AMMK pugazhendhi

இந்நிலையில், டி.டி.வி. தினகரன் மீது அதிருப்தியில் உள்ள அமமுகவைச் சேர்ந்த புகழேந்தி, சேலத்தில் இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டி.டி.வி. தினகரனுக்கு எதிராக அவர் பேசிய விடியோ வெளியான நிலையில், அதிருப்தியில் இருக்கும் புகழேந்தி, அதிமுகவில் இணைய உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகின. 

edappadi palanisamy meet AMMK pugazhendhi

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புகழேந்தி மாமியார் வீடு சேலத்தில் இருப்பதால் அருகில் உள்ள முதல்வர் வீட்டுக்கும் சென்று தீபாவளி வாழ்த்து கூறினேன். ஆனால், அதிமுகவில் இணைய வரவில்லை. 2 இடைத்தேர்தல் தொகுதியில் மாபெரும் வெற்றியடைந்ததற்காக முதல்வர் பழனிசாமி இல்லத்துக்குச் சென்று அவரை சந்தித்து, இடைத்தேர்தல் வெற்றி குறித்து வாழ்த்தினேன்.

edappadi palanisamy meet AMMK pugazhendhi

மேலும், சசிகலா ஜெயிலுக்குப் போகும் போது ஆட்சி, அரசு அதிகாரம் மற்றும் கட்சியை முதல்வர் பழனிசாமியிடம் ஒப்படைத்துவிட்டுப் போனார். கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்த குந்தகமும் இல்லாமல் வீறு நடை போடுகிறார்கள் பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் என்று புகழேந்தி பாராட்டினார். அப்போது அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதிமுகவில் இணைவதாக இருந்தால் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் சேர்வேன். முதல்வர் பழனிசாமி, 35 ஆண்டுகாலமாக எனது நண்பர் எனவும் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios