*       அ.தி.மு.க.வின் உட்கட்சிக்குள் நடக்கும் விவகாரங்கள் குறித்து நாங்கள் கருத்து கூற விரும்பவில்லை: வானதி சீனிவாசன்.

(ஆமாமா மேடம், அது கரெக்ட்டுதான். ஏன்னா அ.தி.மு.க.வின் உட்கட்சிக்குள்ளே வெவகாரம் நடக்குறதுக்கே உங்க கட்சிதான் காரணம் அப்படிங்கிறப்ப, கருத்து வேற தனியா சொல்லணுமா என்ன?)

*       சர்வதேச முதலீட்டாளர் மாநாடு வெற்றிகரமாக அமைந்துவிட்டதாக எடப்பாடியார், தொழில்துறை அமைச்சர் சம்பத்தை பாராட்டியுள்ளார்: செய்தி.

(தல என்னாங்க பெரிய வெற்றி. அந்த வெள்ள குதிரை றெக்க கட்டிட்டு பறந்து வந்து எடப்பாடியார் முன்னால, எக்கச்சக்கமா குனிஞ்சு ஒரு வணக்கம் வெச்சிருந்தால் அதுதான் சக்ஸஸ்!)

*       ஜெயலலிதாவின் போயஸ் வீடு நினைவு இல்லமாக மாற்றும் போது அந்த சொத்துக்குரிய தொகை, அவரது வாரிசுகளுக்கு வழங்கப்படும்: தமிழக அரசின் அட்வோகேட் ஜெனரல் விஜயநாராயணன்.

(ஆபீஸர் நீங்க எடுக்குறது ரொம்ப்ப்ப ரிஸ்கான முயற்சி. இதுக்கு மேலே எதுவுமே சொல்ல மாட்டோம் நாங்க.)

*       என் வீடு கடலூர்ல மாவட்டத்துல இருக்குது. தினமும் சென்னைக்கு வந்து போக முடியலை. அதான் ராஜினாமா பண்ணிட்டேன். மறுபடியும் ரஜினி வர்புறுத்தினால், யோசிக்கு முடிவெடுப்பேன்: ரஜினி மக்கள் மன்றத்தின் மாஜி அமைப்புச் செயலாளர் இளவரசன்.

(நம்பிட்டோம் டாக்டரே! அதிலேயும் ராஜினாமாவுக்கு ஒரு வெளக்கம் கொடுத்திருக்கீக பாருங்க, இதையெல்லாம் தலைவரோட அடுத்த படத்துல பஞ்ச் டயலாக்காகவே பயன்படுத்திக்கலாம்)