தேர்தல் தோல்விக்கு பின் தலையில் துண்டை போட்டுக்கொண்டு உட்கார்ந்து டீ சாப்பிட்டுக்கொண்டிருந்த சில ஏசிஎஸ் கூடவே இருக்கும் சில முக்கிய புள்ளிகள் கனத்த குரலோடு டிஸ்கஸ் பண்ணிக்கொண்டிருந்த விஷயம் யோசிக்க வைத்துள்ளது.

வேலூர் தேர்தல் முடிவுகள் வெளியாகத் துவங்கியதும் முதலில் ஏ.சி.சண்முகம் முன்னிலையில் இருந்துவந்தார். இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். ஆனால், 8வது சுற்று வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியதும் கதிர் ஆனந்த் முன்னிலை பெறத் துவங்கினார். அடுத்தடுத்த சுற்றுகளின்போதும் முன்னிலை தொடர கதிர்ஆனந்தின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் ஃபியூஸ் போன பல்பு மாதிரி டக்கென்று ஆஃப் ஆனார்கள்.

இதனைக் கேட்டுக்கொண்டிருந்த அதிமுக நிர்வாகிகள் சிலர், நாம தோப்போமுன்னு எடப்பாடி அண்ணனுக்கு முன்னாலயே தெரியுமே...எலெக்‌ஷன் நடந்த அன்னைக்கே உளவு துறை அவருகிட்ட கொடுத்த ரிப்போர்ட்ல அதிமுக ஜெயிக்காது ஆனால் கடைசி வரைக்கும் திமுக வேட்பாளருக்கு டஃப் பைட் கொடுக்கும் என சொல்லிருக்கு. இதுல ஸ்பெஷல் என்னன்னா? காஷ்மீர் விவகாரத்துக்கு அப்புறம்தான் தோல்வி உறுதிப்படுத்தப்பட்டுதுனு எடப்பாடிக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு. அதனாலயே எடப்பாடியை இந்த தோல்வி பெரியதாக பாதிக்கவில்லை இதனால் போய் அடுத்த வேலையப் பாருங்கப்பா என நிர்வாகிகளுக்கு சொல்லியிருக்கிறார்.

தேர்தல் தோல்விக்கு பின் தலையில் துண்டை போட்டுக்கொண்டு உட்கார்ந்து டீ சாப்பிட்டுக்கொண்டிருந்த சில ஏசிஎஸ் கூடவே இருக்கும் சில முக்கிய புள்ளிகள் கனத்த குரலோடு டிஸ்கஸ் பண்ணிக்கொண்டிருந்த சில மேட்டர் என்னன்னா? 

*முத்தலாக் தடை மசோதா முஸ்லீம் பெண்களை பாதுகாப்பதற்கானது என்று கூறியதுடன் அதனை அதிமுக முழுமையாக ஆதரிப்பதாக ரவீந்திரநாத் பேசியது.

* எலெக்‌ஷன் தேதியிலதான் காஷ்மீர ரெண்டா பிரிக்குறத்துக்கான அறிவிப்ப மோடி வெளியிட்டாரு. 

*காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்தையும் ரத்து பன்னிட்டாரு. 

*இருவரைக்கும் ஓட்டு போடாம இருந்தா சில பல பாய்மாருங்க எல்லாம் இதக்கேள்விபட்ட உடனயே குடும்பத்தோட போய் ஓட்டு போட்டுட்டு வந்தாங்க. 

*மோடி இப்படி பண்ணதுக்கு அப்புறம் நம்ம ஊரு பாய்மாருங்க யாருக்கு ஓட்டு போட்டுருப்பாங்க நாம சொல்லியா தெரியனும்?  என்று பாஜக மீது பழி போட்டுள்ளனர்.

*போதாதக்குறைக்கு ராஜேந்திரபாலாஜி அடித்த அலப்பறை கொஞ்ச நஞ்சமா? , பாய்ங்க அதிகம் இருக்குற வாணியம்பாடில நின்னுகிட்டு, மோடியை டேடி என பேசியது. 

*நம்ம வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மோடிக்கு ரொம்ப க்ளோஸ் பிரண்ட்ன்னு சொல்லி காண்டாக்கியது. 

மேலும், காண்டாக்கும் விதமாக அவரு ஜெயிச்சா மோடிகிட்ட பேசி உங்களுக்கு நெறைய செய்வாருன்னு சொல்லி சொல்லியே ஏசிஎஸ்ஸை வெச்சு செஞ்சது. 

மோடியோட பிரண்டுக்கு பாய்மாருங்க எப்படி ஓட்டு போடுவாங்கனு? என ஏசிஎஸ் குரூப் குலுங்கி குலுங்கி அழுகிறதாம்.