முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன நடக்கப்போகிறது என்று எனக்கு தெரியும் என டிடிவி.தினகரன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார் என்ற பயம் எடப்பாடிக்கு உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கியது சசிகலா தான் என சென்னை அடையாறில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேட்டியளித்துள்ளார்.

வருமானவரி சோதனை குறித்து பேசிய அவர் சோதனையில் சிறிய அளவு தான் பிடிபட்டுள்ளது, பிடிபடாத பணம் ஏராளமாக உள்ளது என்றார். முதல்வர் பழனிச்சாமி மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துகிறார்.

மலை, காடுகளை அழித்து சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்ட தேவையில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். கொள்ளையடித்த பணம் தான் ஒப்பந்ததாரர் வீட்டில் சிக்கியுள்ளது.தமிழ்நாட்டு மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுவதாக டிடிவி குற்றம்சாட்டினார்.

எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்திய தினகரன், நாடாளுமன்றத்தோடு தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தலும் நடத்த பட வேண்டும் என்றார். வரும் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் கூட்டணி அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.