சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில் போடி நாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

எனது அப்பத்தா பாசத்திற்குரிய ஓ.பழனியம்மாள் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆகியோரை வாழ்த்தி ஆசீர்வாதங்களை வழங்கினார்.

Posted by Jaya Pradeep on Sunday, 28 March 2021

 

அப்போது, ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவரின் தாயார் பழனியம்மாள் நாச்சியாரிடம் ஆசி பெற்றார். இந்தப்புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.