தமிழக அரசின் சில நலத்திட்டங்கள் பெறுவதற்கான வருமான உச்சவரம்பினை ரூ. 24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உயர்த்தியுள்ளார்.

 

தமிழக அரசின் திருமண நிதியுதவி, விதவை பெண்களின் குழந்தைகளுக்கு இலவச பாடநுால், தையல் பயிற்சி பள்ளிகளில் சேர்க்கை மற்றும் தொழிற்பயிற்சி அனுமதி போன்ற மகளிர் நலத்திட்டங்களில், இதுவரையில் ஆண்டுக்கு 24 ஆயிரம் ரூபாயாக வருமான உச்சவரம்பு இருந்து வருகிறது.

 

இந்நிலையில், அரசின் இத்திட்டங்களில் ஆண்டு வருமான உச்சவரம்பு 24 ஆயிரம் ரூபாயில் இருந்து 72 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதேபோல், மூன்றாம் பாலினத்தவரும் இனிமேல் அவர்கள் பெறும் நலத்திட்டங்களுக்கான வருமான உச்சவரம்பு 24 ஆயிரம் முதல் 72 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், நலத்திட்ட பயனாளிகள் கூடுதலாக பயன்பெற வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக அந்த உத்தரவில் தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.