edappadi palanisamy angry against sellur raju
முதல்வர் அலுவலகத்தில் கேட்காமல் மீடியாவுக்கு எந்தக் கருத்தும் சொல்லாதீங்க என செல்லூர் ராஜுவிற்கு செம டோஸ் விட்டுள்ளார்கள் எடப்பாடி தரப்பு.
வைகை ஆற்றில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாக்கோல் போட்டதற்க்குப்பின் அமைச்சர் செல்லூர் ராஜுவின் செயல்பாடுகள் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. பொதுமக்கள் நேட்டசம் மட்டுமல்லாமல் தனது சொந்த கட்சியினரே கலாய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் இன்று செய்தியாளர்களை சந்திப்பில் பேருந்துக் கட்டண உயர்வு குறித்து பேசிய அவர் ‘பிச்சைக்காரங்களே ஒரு ரூபாய்க்கு குறைவா போட்டால் வாங்க மாட்டேங்குறாங்க... அஞ்சு ரூபாய்க்குக்கூட இன்னிக்கு மதிப்பே இல்லை. அதனால பேருந்துக் கட்டண உயர்வு என்பதெல்லாம் ஒரு சுமையே இல்லை...’ எனச் சொல்லி வைக்க, அதற்கும் எதிர்ப்பு கிளம்பியது.
அமைச்சரின் இந்த பதிலால் டென்ஷனான முதல்வர் தரப்பு அமைச்சர் செல்லூர் ராஜுவை கூப்பிட்டி செம டோஸ் விட்டிருக்கிறது. முதல்வர் அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பில் ‘பேருந்துக் கட்டண உயர்வைப் பற்றி முதல்வர் அலுவலகத்தில் அனுமதி வாங்காமல் மீடியாவுக்கு எந்தக் கருத்தும் சொல்லாதீங்க. தேவை இல்லாமல் சர்ச்சையைக் கிளப்ப வேண்டாம்’ என அறிவுறுத்தியிருக்கிறார்கள் ” இதனால் அமைச்சர் செல்லூர் ராஜூ செம மனவுளைச்சலில் உள்ளாராம். என்னதான் நாசூக்க தப்பிச்சு போலாம்னு பார்த்தாலும் நம்மள சிக்க வக்கிறதுல குறியா இருக்குறாங்களே இந்த மீடியா காரங்க என புலம்புகிறாராம்.
