Asianet News TamilAsianet News Tamil

முதல்வர் எடப்பாடி-துரைமுருகன் திடீர் சந்திப்பு.... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை திமுக பொருளாளர் துரைமுருகன் திடீரென சந்தித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edappadi palanisami-Durai Murugan meet
Author
Chennai, First Published Nov 21, 2018, 1:02 PM IST

சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை திமுக பொருளாளர் துரைமுருகன் திடீரென சந்தித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த நவம்பர் 15-ம் தேதி நள்ளிரவு கஜா புயல் நாகை - வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. அதில், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல், உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் பெரும் சேதம் ஏற்பட்டது. மேலும் ஏராளமானோர் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு தரப்பினரிடம் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

Edappadi palanisami-Durai Murugan meet

முன்னதாக இந்நிலையில் கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சந்தித்து பேசினார்.

 Edappadi palanisami-Durai Murugan meet

அப்போது கஜா புயல் நிவாரண பணிகளுக்காக தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடி நிவாரணத்தை முதல்வரிடம் துரைமுருகன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துரைமுருகன் மீட்பு பணிகளில் திமுக அரசியல் பார்க்கவில்லை, அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் செயல்பட்டு வருகிறோம் என்று தெரிவித்தார். புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் அரசியல் செய்யக்கூடாது. மேலும் மத்திய அரசிடம் கேட்கின்ற விதத்தில் அதிகாரமுடன், தைரியமாக கேட்டால் தான் கேட்ட நிதியை பெற முடியும் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios