இளம் பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த ஆட்சிதான் அதிமுக ஆட்சி. இப்படிப்பட்ட ஆட்சி, மீண்டும் தமிழகத்திற்கு வேண்டுமா? என திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை மிகக் கடுமையாக சாடினார்.

கோவை மேட்டுப்பாளையத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அலைகடலென திரண்டு இருந்த திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் விலைவாசி விஷம் போல உயர்ந்து வருகிறது என்றார். அப்போது திமுக கொண்டுவந்துள்ள தேரதல் வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் அவர் எடுத்துரைத்தார். நீலகிரியில் மத்திய அரசால் மாற்றப்பட்டுள்ள உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம் மீண்டும் நீலகிரிக்கு கொண்டுவரப்படும் என்றார். நீலகிரியில் காட்டு யானைகளால் கொல்லப்பட்டு உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு, 25 ரூபாய் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்றார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேட்டுப்பாளையத்தில் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் என்ற அவர், தமிழகம் வளர்ச்சியில் 10 ஆண்டுகளுக்கு பின்நேக்கி சென்று விட்டது என்றார். ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒருமுறை தொலைநோக்கு திட்டங்கள் கொண்டுவந்திரிக்கப்பட வேண்டும், ஆனால் அப்படி அதிமுக ஆட்சியில் செய்யவில்லை, மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்திற்காக திமுக இந்த தேர்தலை சந்திக்கிறது. நான் முதலவராக வேண்டும் என்பதற்கான அல்ல, திமுக ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக அல்ல, மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார். தமிழகத்தில் நடக்கும் ஆட்சிக்கு பொள்ளாச்சி சம்பவமே சான்று என கூறினார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு தமிழகத்தில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவரப்பட்டுள்ளது கூறினார்களே அந்த மருத்துவமனை எங்கே? இது தேர்தல் காலம் என்பதால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்போம் என எடப்பாடி பழனிச்சாமி நாடகமாடிவருகிறார். நான் ஒன்று சொல்கிறேன், இது திராவிட மண், தந்தை பெரியார் மணி, பேரறிஞர் அண்ணா மண், முத்தமிழ் அறிஞர் கலைஞர் மண், இங்கு ஒருபோதும் பாஜகவுக்கு இடமில்லை. 

பல்வேறு ஊடகங்களில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன, திமுக கூட்டணி வெற்றிபெறும் என கருத்து கணிப்புகளை வெளியிடும் ஊடகங்களை ஆளுங்கட்சி மிரட்டி வருகிறது. மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பது மட்டுமே எடப்பாடி பழனிச்சாமியின் குறிக்கோள், வரும் தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். குட்காவில் ஊழல் செய்யக்கூடிய ஆட்சி தான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி, சாத்தான்குளத்தில் தந்தை மகனை காவல்துறையினர் கைது செய்து கொன்ற ஆட்சி தான் அதிமுக ஆட்சி, தூத்துக்குடியிர் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ஆட்சிதான் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி. பொள்ளாச்சியில் இளம் பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த ஆட்சிதான் அதிமுக ஆட்சி. இப்படிப்பட்ட ஆட்சி, மீண்டும் தமிழகத்திற்கு வேண்டுமா? என திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை மிகக் கடுமையாக சாடினார்.