Asianet News TamilAsianet News Tamil

பசும்பொன் செல்ல எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுமதி இல்லை..? உளவுத் துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்

சூரியனைப் பார்த்து ஏதோ குறைகிறது என எடப்பாடி பழனிச்சாமி சசிகலா வை விமர்சித்த விவகாரம் தென்மாவட்டங்களில் குறிப்பாக முக்குலத்தோர் சமுதாய மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Edappadi Palanichamy is not allowed to go pasumpon ..? Shock report given by the intelligence department
Author
Chennai, First Published Oct 29, 2021, 9:44 AM IST

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் பட்சத்தில்  அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை அலர்ட் செய்துள்ளதால் எடப்பாடி பழனிச்சாமிக்கு போலீஸ் தரப்பில் அனுமதி வழங்காப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இரட்டை தலைமையில் கீழ் இயங்கிக் கொண்டிருக்கிறது அதிமுக, சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் மொத்த அதிமுகவையும் எடப்பாடி பழனிச்சாமி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு அதிமுகவின் நிலைமை உள்ளது.

கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தாளும், முதல்வர் வேட்பாளராக களமிறங்கியது முதல், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி ஏற்றது முதல் ஓபிஎஸ்சை காட்டிலும் எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கி இருக்கிறது என்றே சொல்லலாம். இந்நிலையில் சிறையில் இருந்து வந்தவுடன் தீவிர அரசியலில் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட சசிகலாவோ சட்டமன்ற தேர்தலின் போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்து அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 

இதையும் படியுங்கள்:  கல்வியைக் காவிமயமாக்கும் பாஜகவின் சதித்திட்டத்துக்குத் துணைபோகும் ஸ்டாலின்.. கோமாளி என விமர்சித்த சீமான்.

Edappadi Palanichamy is not allowed to go pasumpon ..? Shock report given by the intelligence department

அதற்கிடையில் எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் அதிமுகவில் அவரால் இணைய முடியவில்லை, அந்த அளவிற்கு ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமை சசிகலாவை கட்சியில் சேர்ந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி சந்தித்துள்ள நிலையில், இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது தொண்டர்களை சந்திக்க போகிறேன் கட்சியை பாதுகாக்க வேண்டும்  என்ற முழக்கத்துடன் சசிகலா ஐந்து நாள் அரசியல் சுற்றுப்பயணம் துவங்கியுள்ளார். முன்னதாக அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயருடன் கல்வெட்டை திறந்து வைத்த சசிகலா சென்னை தியாகராயநகரில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக கொடி ஏற்றினார். இது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

பின்னர் இது தொடர்பாக ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது, அதை சட்டரீதியாக எதிர்ப்போம் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், சூரியனைப் பார்த்து... ஏதோ... அதை நான்  ஓபனாக சொல்ல முடியாது எனக் கூறினார். (சூரியனை பார்த்து நாய் குரைத்தால் பாதிப்பு நாய்க்குதான்)எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சு சசிகலா ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. 

Edappadi Palanichamy is not allowed to go pasumpon ..? Shock report given by the intelligence department

இதையும் படியுங்கள்: மூன்றரை கிலோ தங்கம் கொடுத்த லாட்டரி மார்ட்டின் குடும்பம்….. பெருமாளுக்கு காணிக்கை..!

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் இப்பேச்சை பலரும் கண்டித்து வருகின்றனர், இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதில் சசிகலா, தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் சசிகலா அவர்கள் கலந்துகொள்ள மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல் அதிமுக சார்பில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குரு பூஜையில் கலந்து கொள்ள அனுமதி கேட்டு மனு கொடுத்துள்ளனர், முன்னதாக கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அவர்கள் அஞ்சலி செலுத்துவார்கள் என கூறப்பட்டுள்ளது.

Edappadi Palanichamy is not allowed to go pasumpon ..? Shock report given by the intelligence department

சூரியனைப் பார்த்து ஏதோ குறைகிறது என எடப்பாடி பழனிச்சாமி சசிகலா வை விமர்சித்த விவகாரம் தென்மாவட்டங்களில் குறிப்பாக முக்குலத்தோர் சமுதாய மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே எடப்பாடி பழனிச்சாமி  பசும்பொன் வரும் பட்சத்தில் அவர் மீது மக்கள் அதிருப்பதி வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறது, அதன் மூலம் சட்டம் ஒழுங்கு சிக்கல்  ஏற்படலாம் என உளவுத்துறை அதிர்ச்சித் தகவல் கொடுத்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு செல்ல போலீஸ் தரப்பில் அனுமதி வழங்கப்படாது என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து இதுவரை எந்தவித அதிகாரப் பூர்வ தகவலும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடதக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios