அதிமுக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமையகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் சிவி சண்முகம், தங்கமணி, ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் விலக வேண்டும் என்றும் அதிமுகவினர் ஒரே அணியாக செயல்பட வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணக்கமான உறவை ஏற்படுத்துவது குறித்தும், பன்னீர்செல்வம் அணியினருடன் பேச்சு வார்த்தை நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

டிடிவி தினகரன் அதிமுகவில் விலகியதற்குப் பிறகு முதன்முறையாக அமைச்சர்கள் கூட்டம் கூட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.