Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் - இணைப்பை சாத்தியமாக்க தீவிர முயற்சி??

edappadi meeting with ministers in admk office
edappadi meeting with ministers in admk office
Author
First Published Aug 1, 2017, 4:21 PM IST


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 8 அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது எடப்பாடி தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. இந்த அரசை காப்பாற்றி கொள்ள எடப்பாடி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

எடப்பாடிக்கு எதிராக அவர்கள் தரப்பு எம்.எல்.ஏக்களே டிடிவிக்கு ஆதரவாகவும், தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

edappadi meeting with ministers in admk office

இதனிடையே 60 நாட்கள் கெடு விதித்திருந்த தினகரன் மீண்டும் கட்சி பணிகளை தொடர்வேன் என தெரிவித்துள்ளதால் எடப்பாடி தரப்பு ஆடிபோய் உள்ளது.

தமிழகத்தில் மீண்டும் அடுத்தகட்ட பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது. இதைதொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

edappadi meeting with ministers in admk office

ஆனால் எடப்பாடி பழனிசாமியை டிடிவி ஆதரவாளர்களான தங்க தமிழ்செல்வனும், தளவாய் சுந்தரமும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

இந்நிலையில் இதை தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் எடப்பாடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் 8 அமைச்சர்கள் பங்கேற்று அணிகள் இணைப்பு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios