தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து....”நன்றாக பார்! முழுமையாக சந்திரமுகியான கங்கா மாதிரி, முழு ஜெயலலிதாவாகிய எடப்பாடியை பார்.” என்று மீம்ஸ்கள் கிண்டலடிக்கின்றன, போற்றுகின்றன. சென்டிமெண்ட், அதிகாரம், பாதுகாப்பு என எல்லா விஷயத்திலும் ஜெயலலிதாவை எடப்பாடியார் காப்பி அடிக்கிறார்! என்பதே இதன் உட்பொருள். 

ஆனால் அ.தி.மு.க.வின் சீனியர்களோ “வாய்ப்பே இல்லை. அப்படியெல்லாம் எடப்பாடியாரால் எந்த காலத்திலும் ஜெயலலிதாவாகிட முடியாது. அம்மா அவர்களின் முன்னால் நிற்க கூட அமைச்சர்கள் பயப்படுவார்கள். அம்மாவின் கோபப்பார்வைக்கு எம்.எல்.ஏ.க்களுக்கு பல்ஸ் எகிறி, ஹார்ட் அட்டாக் வந்துவிடும். 
ஆனால் எடப்பாடியாரிடமோ எம்.எல்.ஏ.க்களே நக்கல் மற்றும் நய்யாண்டித்தனம், கோபம், எரிச்சல் என எல்லா உணர்ச்சிகளையும் கொட்டி  பேசிக்கொண்டிருக்கிறார்கள். முதல்வரிடம் எந்த பயமும் அவர்களுக்கு இல்லை.

இதற்கு பக்கா உதாரணம்தான் இந்த சம்பவம்!....
சமீபத்தில், நாங்குநேரி தொகுதியில் யாரை நிறுத்தலாம் என்பதில் எடப்பாடியாருக்கு குழப்பம். அப்போது தன்னை சந்திக்க வந்த அம்பாசமுத்திரம் தொகுதியின் எங்க கட்சி எம்.எல்.ஏ. முருகையா பாண்டியனிடம் ‘மனோஜ் பாண்டியனை நாங்குநேரியில் நிறுத்தினால் எப்படி இருக்கும்?’ என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த மனிதர் தன் மனதில் பட்டதை, யதார்த்தத்தை சொல்வதை விட்டுட்டு “தாராளமா நிறுத்துங்க. அவரு ஜெயிச்சு வந்து கட்சியின் பொதுச்செயலாளராகட்டும். பின்னர் சி.எம். ஆகட்டும், எங்க ஊருக்கு பெருமைதானே!” என்று எடக்காக பதில் சொல்லி இருக்கிறார். அதாவது மனோஜ் பாண்டியன் சரியான வேட்பாளரில்லை அப்படிங்கிறதையும், நெல்லை மாவட்ட கழகத்தில் மனோஜுக்கு ஆதரவில்லை அப்படிங்கிறதையும் எப்படி கிண்டலா சொல்லியிருக்கார் பாருங்க. 

இப்படி ஒரு எம்.எல்.ஏ. தன்னிடம் பேசுறதை பார்த்துட்டு முதல்வர் ஏக அப்செட்.” என்று நிறுத்தினார்கள். 
என்னத்த சொல்ல?!