கடந்த டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். இதையடுத்து ஒ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார். சசிகலா அதிமுக பொது செயலாளரா பொறுப்பேற்றார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் ஒ.பி.எஸ். தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர், அதிமுக சட்டமன்ற அதிமுக தலைவராகவும், முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார். இதற்கு, ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து ஓ.பி.எஸ். மற்றும் சசிகலா என அதிமுகவில் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றன. ஏற்கனவே சசிகலா, அதிமுக பொது செயலாளராக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பலர், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், தற்போதுள்ள எம்எல்ஏக்கள் சிலரும், அவரது அணிக்கு தாவிவிட்டனர்.

இதனால், தற்போதுள்ள சூழ்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் வெளியே இருந்தால் ஓ.பி.எ.ஸ். அணிக்கு தாவி விடுவார்கள் என்ற சூழல் நிலவியது. இதையடுத்து அனைத்து எம்எல்ஏக்களையும் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டள்ளனர்.

அனைத்து எம்எல்ஏக்களும் சுமார் ஒரு வாரத்துக்கு மேலாக தங்களது வீட்டுக்கு செல்லாமல், ரிசார்ட்டிலேயே உள்ளனர். அவர்களை பார்க்க வரும் உறவினர்களும், குடும்பத்தினரும் போலீசாரின் நீண்ட சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதற்கிடையில் தங்களுக்கு எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது எனவே ஆட்சி அமைக்க அழைக்குமாறு கவர்னரிடம் இரு தரப்பினரும் கேட்டு கொண்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர், நேற்று மாலை பெங்களூர் பார்ப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அவர், நேற்று முன்தினம் இரவு கோல்டன் பே ரிசார்ட்டில், எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, எந்த சூழ்நிலையிலும் ஆட்சியை விட்டு கொடுக்க கூடாது. நாம் ஒரே அணியாக இருந்து ஆட்சியை பிடிக்க வேண்டும். நான் சிறைக்கு சென்றாலும், எனக்கு அடுத்த பதவியாக துணை பொது செயலாளருக்கு டி.டி.வி.தினகரனை நியமிக்கிறேன். அவர், கட்சியை கட்டி காப்பாற்றுவார் என கூறியதாக மூத்த அதிமுக நிர்வாகி ஒருவர் கூறினார்.

இந்நிலையில், இன்று காலை எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஆட்சி அமைக்கும்படி கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்தார்.

அதன்படி இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கிறார், கவர்னர் வித்யாசாகர் ராவ்.