edappadi banner tore in dindigul
எம்ஜிஆரை பற்றி அவதூறாக பேசியதால் திண்டுக்கல் சீனிவாசனுக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. நேற்று இப்தார் விருந்துக்காக வைக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன் பேனரை தொண்டர்கள் கிழித்து எதிர்ப்பை காண்பித்தனர்.
இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்த நிர்வாகி ஒருவர் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
சமீபத்தில் மத்ரியாயில் பேட்டியளித்த மைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி வட மாநில முதல்வர்களை அழைப்பீர்கள என்ற கேள்விக்கு எம்ஜிஆரை தமிழ்நாட்டை தாண்டி யாருக்கு தெரியும்என்ற ரீதியில் பதில் அளித்தது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசனுக்கு கனட்னங்கள் வலுத்து வருகிறது. அவர் பதவி விலக வேண்டும் எட்ன்ர கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
நேற்று பேட்டியளித்த எம்ஜிஆரின் பாதுகாவலர் சீனிவாசன் செல்லும் இடமெல்லாம் கருப்பு கொடி காட்டுவோம், பார்த்த இடத்திலெல்லாம் உதைப்போம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட அதிமுக அம்மா அணி சார்பில் பேகம்பூர் பள்ளி வாசலில் இன்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி பேகம்பூர் பள்ளிவாசல் பகுதி முழுவதும் எடப்பாடி பழனிசாமி படம் போட்ட பிளக்ஸ்கள் வைக்கப்பட்டிருந்தன. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்ததது.
இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த சிலர் அங்கு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ்களை கிழித்து எறிந்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இதைனிடையே நேற்று நள்ளிரவில் பேகம்பூர் பகுதியில் வசித்து வரும், அதிமுக 38வது வார்டு செயலாளர் முகமது இக்பால் வீட்டில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
