அந்த டெண்டர்கள் என்னென்ன? அந்த டெண்டர்கள்ளை யார் எடுத்துள்ளனர் ? அவர்கள் யார் யார் ? என்பது குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம்.

மாநில நெடுஞ்சாலை 37 ல்  ஒட்டன்சத்திரம்- தாராபுரம்- அவினாசி பாளையம் இடையே 70.20 கி.மீ நீளத்துக்கு 4 வழிச்சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில திட்ட மதிப்பீடு ரூ713.24 கோடி. பிறகு இது ரூ.1515 கோடிக்கு உயர்த்தப்பட்டது. இப்போதைய சந்தை நிலவரப்படி 1 கிமீ தூரம் சாலை அமைக்க 2.2 கோடி ரூபாய் போதுமானது என திமுக கூறுகிறது.. எனவே இதற்கு ரூ 200 கோடி போதுமானது. ரூ 1515 கோடி என்பது மிக அதிகம் என்கிறது திமுக. இந்த டெண்டரை எடுத்துள்ளது ஈரோடு ராமலிங்கம் அண்ட கம்பெனி. இந்த நிறுவனத்தில் அதன் உரிமையாளர்  ராமலிங்கம்,  அவரது மகன் சந்திரகாந்த்  மற்றும் மகள்கள் ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர்.

இந்த சந்திராகாந்தின் மனைவி சரண்யாவின் சகோதரியான திவயாவை எடப்பாடி பழனிசாமியின்  மகள் மிதுன்குமார் திருமணம் செய்துள்ளார். தன் மகனின் சகலை நிறுவனத்துக்கு இந்த டெண்டரை கொடுத்திருக்கிறார் எடப்பாடி என்பது அவர் மீதான முதல் குற்றச்சாட்டு..

அடுத்து மாநில நெடுஞ்சாலை 39 ல் திருநெல்வேலி- செங்கோட்டை- கொல்லம் இடையே 45.64 கிமீ நீளத்துக்கு 4 வழிச்சாலை. இதன் திட்ட மதிப்பு  ரூ 407.6 கோடி. ஆனால்  டெண்டர் விடும்போது  இதன் மதிப்பு ரூ 720 கோடி ஆனது. இதற்கு ரூ 130 கோடி போதுமானது என்பது திமுக சொல்லும் கணக்கு . இந்த டெண்டரை எடுத்தது. வெங்கடாஜலபதி கன்ஸ்ட்ரக்சன்  நிறுவனம்.

இந்த நிறுவனத்தில்  இபிஎஸ்ன் சம்பந்தி சுப்ரமணியன்  ஒரு பங்குதாரர். அண்மையில் வருமான வரி சோதனைக்கு உள்ளான் எஸ்பிகே நிறுவனத்தின் நாகராஜன் மற்றொரு பங்குதாரர்.

அடுத்த மதுரை ரிங் ரோடு 4 வழிச்சாலை திட்டத்துக்கு ரூ 200 கோடி  டெண்டர். இது பாலாஜி டோல் வேய்ஸ் நிறுவனத்துக்கு தரப்பட்டுள்ளது. இதிலும்  எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி  சுப்ரமணியன், நாகராஜ் மற்றும் சேகர் ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர்.

அடுத்தது வண்டலூர் முதல் வாலாஜாபாத் வரையிலான 6 வழிச்சாலைத் திட்டம். இதன் திட்ட மதிப்பீடு ரூ  200 கோடி. இந்த டெண்டர் நாகராஜனின்  எஸ்பிகே நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது

ராமநாதபுரம் , திருவள்ளூர், கிருஷ்ணகிரி மற்றும்  விருதுநகர் மாவட்டங்களில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளையும் பராமரிப்பதற்கான டெண்டரின் மதிப்பீடு  ரூ 2000 கோடி. இந்த  டெண்டர் அருப்புக்கோட்டை எஸ்பிகே நிறுவனத்துக்கு  தரப்பட்டுள்ளது.

அவர்கள் இதை எடப்பாடியின் சம்பந்தி சுப்ரமணியின் பங்குதாராக இருக்கும் வெங்கடாஜலபதி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துன்கு சப் காண்ட்ராக்ட் விட்டுள்ளனர். இப்படி தமிழகத்தின் முக்கிய 5 நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் முதலமைச்சருக்கு நெருக்கமானவர்களுக்கு விடப்பட்டுள்ளது என்பதுதான் திமுகவின் குற்றச்சாட்டு.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ தற்போது தனது கையில் எடுத்துள்ளது.