Tamil Nadu Chief Minister Edappadi Palanichami in advance of the budget she paid homage at the memorial
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பட்ஜெட் தாக்கல் நடத்துவதற்கு முன், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
தமிழக அரசின் 2017ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி தமிழக நிதியமைச்சர் ஜெயகுமார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று, அறிக்கை நகலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதை தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றார். அங்கு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதல்வர் எடப்பாடி, தலைமை செயலகம் புறப்பட்டு சென்றார். அவருடன் அமைச்சர் பெஞ்சமீன் இருந்தார்.
தற்போது, தமிழக அரசு சார்பில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும், ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு செல்வதை மிக முக்கிய நிகழ்வாக நடத்தப்படுகிறது.
குறிப்பாக அதிமுகவில் உட்கட்சி விவகாரம் அல்லது சலசலப்பு உள்பட எவ்வித பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்று வருகின்றனர் என பொதுமக்கள் பரபரப்பாக பேசுகின்றனர்.

