Asianet News TamilAsianet News Tamil

முக்கிய பதிவை நீக்கினார் முதல்வர்..! 4 மணி நேரத்தில் நடந்தது என்ன..?

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக ஏற்க வேண்டும் என கோரிக்கை வைத்து டேக் செய்திருந்ததை தற்போது ட்விட்டர் பக்கத்தில் இருந்து  நீக்கி உள்ளார் முதல்வர் எடப்பாடி 

edapadi removed his tweet from socialnetwork
Author
Chennai, First Published Jun 5, 2019, 3:26 PM IST

முக்கிய பதிவை நீக்கினார் முதல்வர்..! 4 மணி நேரத்தில் நடந்தது என்ன..? 

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக ஏற்க வேண்டும் என கோரிக்கை வைத்து டேக் செய்திருந்ததை தற்போது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளார் முதல்வர் எடப்பாடி. 

மத்திய அரசால் 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட, முன்னாள் இஸ்ரோ தலைவரான கஸ்தூரிரங்கன் தலைமையில் தற்போது புதிய கல்வி கொள்கையான மும்மொழிகொள்கையை வரையறுத்து மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதில் மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் வகையில் இந்த பரிந்துரை எடுத்துரைக்கிறது. அதன்படி பார்த்தோமேயானால், இந்தி கட்டாயம் இல்லாத மாநிலத்தில் மூன்றாவது மொழியாக இந்தி பயில வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் இந்த மும்மொழிக்கொள்கை உணர்த்துகிறது.

edapadi removed his tweet from socialnetwork

அதே நேரத்தில், இந்தி கட்டாயம் உள்ள மாநிலங்களில் மூன்றாவது மொழியாக தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட பிற மாநில மொழிகளையும் தேர்வு செய்யலாம் என்ற ஒரு ஆப்ஷனை கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகம் வங்கதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இந்தியை எதிர்க்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. 

குறிப்பாக தமிழகத்தில் தற்போது வரை இருந்து வரும் இருமொழிக்கொள்கை தான் தொடரும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக தெரிவித்திருந்தார். இது தவிர்த்து தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே  தொடரும் என சென்ற வாரம் மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதினர் சுட்டிக்காட்டியிருந்தார்.

edapadi removed his tweet from socialnetwork

இந்த நிலையில் இன்று  காலை பிரதமர் நரேந்திர மோடிக்கு டேக் செய்து செய்த ட்வீட்..!

Request Hon'ble PM @narendramodi ji to include Tamil as an optional language for study in other states. This will be a great service to one of the most ancient languages of the world.

— Edappadi K Palaniswami (@EPSTamilNadu)
June 5, 2019 

இந்தி திணிப்பு என்ற ஒரு விஷயத்தில் தமிழகத்திலோ திமுக பெருமளவு எதிர்த்து வரும் சமயத்தில், எடப்பாடி பழனிசாமியும் ஒத்த கருத்தை முன் வைத்து உள்ளதால் கூடுதல் கவனம் பெற்று இருந்தது. இதற்கிடையில், தமிழை மற்ற மாநிலத்தில் மூன்றாவது மொழியாக கொண்டு வர வேண்டும் என முதல்வர் கோரிக்கை வைத்திருப்பது, தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு ஒப்புதல் அளித்தவாறு உள்ளது என பலரும் எதிர்ப்பு அலைகள் எழவே, ட்வீட் செய்த 4 மணி நேரத்தில் மீண்டும் அந்த பதிவை நீக்கி உள்ளார் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios