edapadi palanisami photos is in tamil nadu police department instead of jayalalitha
ஜெ படத்திற்கு பதிலாக “பழனிசாமி படம்”.... படத்தை மாற்றும் பணி மும்முரம்….
தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகத்திலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தையே இன்னும் வைத்துள்ளனர். இந்நிலையில், அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானதால், அவருடைய படம் அரசு அலுவலகத்தில் இருக்க கூடாது என , பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது தமிழக முதல்வராக உள்ள , எடப்பாடி பழனிசாமியின் படத்தை அரசு அலுவலகங்களில் வைக்கும் பணி தீவிரம் அடைந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது
அதே வேளையில் குறிப்பாக, தமிழக காவல் துறை அலுவலகங்களில் ஜெ படத்தை எடுத்துவிட்டு , அந்த இடத்தில் தமிழக முதல்வர் பழனிச்சாமியின் படத்தை வைக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
