தினகரனின் கைகளில் இருந்து எகிறி குதித்து ஸ்டாலினின் கரங்களில் அடைக்கலமாகி இருக்கிறார் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி. சில நாட்களுக்கு முன் ஒரு கூட்டத்துடன் சென்னை அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியில் இணைந்தவர், இன்று அவரை கரூருக்கு அழைத்து வந்து மெகா இணைப்பு விழா பொதுக்கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். 

இந்த விழாவில் எழுச்சியுரை ஆற்றிய ஸ்டாலின், பேப்பரில் எழுதி வைக்க அல்லது பிரிண்ட் செய்து வைக்கப்பட்டதை வைத்து பேசினார். இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரதமர் மோடி இருவரையும் வரிக்கு வரி வெளுத்தெடுத்திருக்கிறார். அதன் ஹைலைட் பாயிண்டுகள் இதோ...

*    மோடியாவது தன்னை ஒரு மன்னராகத்தான் நினைக்கிறார். ஆனால் எடப்பாடிக்கோ தான் ஒரு கடவுள் என்று நினைப்பு. அரசாங்கத்தின் செலவில் எடுக்கப்படும் ஒரு விளம்பர படத்தில், ‘யார் பேருக்கு அர்ச்சனை பண்ணனும்?’ என்று அர்ச்சகர் கேட்க, ‘நம்ம எடப்பாடி சாமி பெயருக்கு’ன்னு சொல்ற மாதிரி பண்ணியிருக்காங்க. தமிழக முதல்வருக்கு தான் ஒரு கடவுளுன்னு நினைப்பு. 

*    டெங்கு, பன்றிக்காய்ச்சல் மாதிரியான நோய்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முக்கிய இடத்தில் இருப்பதுதான் தமிழக அரசு செய்திருக்கும் சாதனை. 

*    தைரியமிருந்தால், திராணியிருந்தால், அதிகார தோரணையிருந்தால், கஜா புயல் பாதிப்புகளை இப்போது வரை பார்வையிட வராத மோடியை நோக்கி கேள்வி கேட்க முடியுமா எடப்பாடியால்?

*    எடப்பாடி அடிக்கடி ‘நானும் ஒரு விவசாயி, நானும் ஒரு விவசாயின்’ன்னு சொல்றார். பச்ச பொய் இது. இவரு என்ன விவசாயம் செய்தார்? அதை சொல்லட்டும் பார்க்கலாம். மக்கள் திட்டங்களுக்கான அரசு பணத்தை கள்ளத்தனமாக அறுவடை செய்த பலே விவசாயிதான் இவர்.

*    ’நாட்டுக்காக நான் சிறை சென்றிருக்கிறேன்.’ என்கிறா எடப்பாடி. எந்த நாட்டுக்காக, எப்போது, எதற்காக சிறை போனீங்கன்னு சொல்லுங்க. அத்தனையும் பொய், ஆகாச பொய்.

*    இங்கே பேசிய செந்தில் பாலாஜி சொன்னது போல், கழக ஆட்சி அமைந்த அடுத்த நொடியில் எடப்பாடி பழனிசாமியை ஊழல் வழக்குகளுக்காக கைது செய்து சிறையிலடைப்போம். 
என்று முழங்கியிருக்கிறார்.