இரட்டை இலை சின்னம் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் தரப்பிற்கே சொந்தம் என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. 

ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் தரப்பிற்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருந்தது. இதனை எதிர்த்து டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது 

இந்த வழக்கு தொடர்பாக இன்று நீதிபதிகள் சிஸ்தானி, சங்கீதா திங்க்ரா செகல் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதன்படி, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியே தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு, அதிமுகவிற்கு இரட்டை இலையை ஒதுக்கி தீர்ப்பளித்திருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். இரட்டை இலை சின்னம் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தரப்பிற்கே சொந்தம் என கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எடப்பாடி,

அம்மாவின் ஆசியோடும், அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி என்று  தெரிவித்து உள்ளார்.இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு தான் செல்லும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி என்றும், இதில் மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு....

அவர்கள் எங்கு சென்றாலும் ஒரே ஆதாரத்தை தான் கொடுக்க போகிறார்கள்.. நாங்களும் இதே ஆதாரம் தான் கொடுக்க போகிறோம். நீதிபதிகள் விசாரணை செய்து தான் இந்த உத்தரவு கொடுத்து உள்ளனர்.  

எனவே இரட்டை இலை அதிமுகவிற்கு தான் சொந்தம் என்றும், திமுக வின் தூண்டுதலால் தினகரன் இந்த வழக்கை தொடர்ந்தார். ஆனால்  அதில் உண்மை இல்லை என்பதால் எங்களுக்கு சாதகமான உத்தரவு வந்துள்ளது என கூலாக தெரிவித்து உள்ளார் எடப்பாடி.

இதற்கு முன்னதாக,, தமிழகத்தில் வலுவான கூட்டணி அமையும் என பாஜக சொன்னது போலவே, பாமக அதிமுக பாஜக கூட்டணி உறுதியானது. இதுவே பெரிய வெற்றியாக பார்க்கப்படும் சமயத்தில், மீண்டும் வெற்றிக்கு வெற்றி சேர்க்கும் விதமாக இரட்டை இலை சின்னம்  ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தரப்பிற்கே சொந்தம் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.