திமுக கூட்டணியுடனான உறவு பிரசாந்த் கிஷோருக்கு கருப்பு புள்ளியாக அமையும் என பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சர்களில் ஒருவருமான பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .  அவர் வைத்துள்ள இந்த விமர்சனத்தை திமுகவினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர் .  எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று யார் முதலமைச்சராகப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு  தமிழக  மக்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்து  வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் கனவில் இருக்கும் கட்சித்தலைவர்கள் தங்கள்  கட்சியின் வெற்றிக்கு இப்போதிலிருந்தே வியூகம் வகுக்க தொடங்கிவிட்டனர். 

தமிழகத்தில் இப்போதிலிருந்தே  சட்டமன்ற தேர்தல் பணிகளும் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டன என்று சொல்லும் அளவிற்கு கட்சிகள் வேகம்காட்ட தொடங்கியுள்ளன.  இந்நிலையில்  திமுகவுக்கு தேர்தல் ஆலோசனை  வழங்கவும் தேர்தல் வியூகங்கள் அமைக்கவும் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருடன்  திமுகா ஒப்பந்தம் செய்துள்ளது.  இது அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது .  பிரசாந்த் கிஷோரை எப்படியாவது அதிமுகவுக்கு இழுத்துவிட வேண்டும் என பல்வேறு முயற்சிகளில் இறங்கியது  ஆனால் பிரசாந்த் கிஷோர் திமுகவுடன்  கை கோர்த்து விட்டார் . இதனால் பிரசாந்த் கிஷோரையும் திமுகவையும் அதிமுகவினர் மற்றும் அவர்களது கூட்டணி கட்சியினர் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.  

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள்  மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பிரசாந்த் கிஷோர் திமுக உறவு என்பது சக்கரம் இல்லாத வண்டியை போன்றது .  திமுகவுடனான உறவு  பிரசாந்த் கிஷோருக்கு கருப்புப் புள்ளியாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து திமுக மற்றும் பிரசாந்த் கிஷோர் கூட்டணியை விமர்சித்து வரும் எதிர்க்கட்சியினரை திமுக தொண்டர்கள் கலாய்த்து வருகின்றனர். திமுகவை விமர்சிப்பது  திமுகவுக்கு கிடைத்த  வெற்றியே எனவும் ,  எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி இதிலிருந்து உறுதியாகிவிட்டது என்றும்  திமுகவினர் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர் .