Dwakaran is better than the pedigree New party The exterior is a different kind of mannarkudi
கணவன் - மனைவி சண்டைக்கெல்லாம் ஒரு தனிக் கட்சியா என தீபாவையும் மாதவனையும் கிண்டல் செய்யாதவர்கள் இல்லை. பொண்ணு கொடுக்காததுக்கே கட்சி ஆரம்பிக்கும் போது, புருஷன் - பொண்டாட்டி சண்டைக்கு கட்சி ஆரம்பிக்கக் கூடாதா என தீபா புருஷன் மாதுகுட்டி கேட்கும் அளவிற்கு மன்னார்குடி கூடாரத்தில் கூத்து அரங்கேறியுள்ளது.
“திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் நேற்று செய்தியாளர்களை சந்திக்கையில், ‘தினகரன் அதிமுகவை வழிநடத்த சரியான தலைவராக இருப்பார் என நினைத்து ஏமாந்துவிட்டோம். அவர் சரியான தலைவர் இல்லை. இன்னும் இரட்டை இலையை மீட்போம் என சொல்லிக்கொண்டிருப்பது எல்லாம் முட்டாள்தனம். சின்னம்மா சிறைக்குப் போகும்போது எடப்பாடியைத்தான் முதல்வராக நியமித்துவிட்டுப் போனார். ஆனால், அவரை எதற்காக எதிர்க்க வேண்டும்?’ என தாறுமாறாக பேசித்தள்ளினார்.

இப்போ மன்னார்குடி வகையறா யார் யார்ய்ன்னு பார்க்கலாம், சசிகலாவின் உடன் பிறந்தவர்கள் சுந்தரவதனம், ஜெயராமன், வினோதகன், வனிதாமணி மற்றும் கடைக்குட்டி திவாகரன் என மொத்தம் சசிகலாவுடன் சேர்த்து 6 பேர். சுந்தரவதனத்தின் வாரிசுகள்தான் அனுராதாவும், டாக்டர் வெங்கடேஷும். வனிதாமணியின் மகன்தான் தினகரன். சொந்த தாய் மாமன் மகளான அனுராதாவைத்தான் திருமணம் செய்திருக்கிறார் தினா. தினகரனுக்கு சின்ன மாமனார் தான் திவா. ஆனாலும், திவாவையோ அவரது குடும்பத்தையோ கட்சிக்குள் சேர்க்காமல் தள்ளியே வைத்திருந்தார் தினா. இந்த நேரத்தில் சிறையிலிருந்து கணவரின் உடலை காண பரோலில் வந்த சசிகலாவிடம், சில விஷயங்களைப் பேசியிருக்கிறார் திவா.
அப்போ, ‘ஜெய்க்கு கல்யாணம் பண்ணலாம்னு யோசிக்கிறேன். நம்ம தினகரன் மகள் ஜெய் ஹரிணியை கேட்கலாம்னு நினைக்கிறேன்..’ என்று திவா சொல்லியிருக்கிறார். அதற்கு, ‘நீ கேட்டுப் பாரு.. கொடுத்தா பண்ணிவச்சுக்கோ. நான் சொல்லி என்ன நடக்குது இங்க’ என சொல்லி நைசாக எஸ்கேப் ஆனாராம் சசி. அதன் பிறகு, திவாகரன் ஒரு நாள் சென்னைக்கு வந்திருக்கிறார். தினகரனை நேரில் சந்தித்தும் பேசியிருக்கிறார்.

‘ஜெய் ஆனந்துக்கு உங்க மகளை கேட்டு வந்திருக்கேன்..’ என வெளிப்படையாகவே கேட்டாராம். அதற்கு தினா, ‘இப்போ என்ன மாமா அவ கல்யாணத்துக்கு அவசரம். அவ இன்னும் படிக்கணும்னு சொல்லிட்டு இருக்கா. அப்புறம் பேசிக்கலாம்...’ என்று பிடிகொடுக்காமல் பேசினாராம். அதற்கு மாமா திவா, ‘அதனால என்ன... கல்யாணம் பண்ணினால் படிக்க முடியாதா? நானே படிக்க வெச்சுக்குறேன்..’ என்று கேட்க, ‘அது சரியா வராது மாமா...
கொஞ்ச நாள் போகட்டும். இப்போ கல்யாண பேச்சு எடுக்க வேண்டாம்’ என கறாராக சொல்லிவிட்டாராம் மருமகன் தினா. கடைசியாக, ‘சரி கல்யாணம் நீங்க சொல்ற சமயத்துலயே வெச்சுக்கலாம். இப்போதைக்கு தாம்பூலம் மாத்தி உறுதி பண்ணிக்கலாம்...’ என்று கேட்டாராம் மாமா திவா. ஆனால் அதற்கு தினாவோ, ‘ பொண்ணு சம்மதம் இல்லாமல் என்னால எதுவும் செய்ய முடியாது.
கல்யாணம் பேசுற சமயத்துல அதைப் பார்த்துக்கலாம். இப்போ எதுவும் வேண்டாம்...’ என நழுவிவிட்டாராம்.
ஏற்கெனவே மாமா திவா தன் மகன் ஜெய்க்குக் கட்சியில் பொறுப்பு கேட்டார். அதை மருமகன் தினா கொடுக்கவில்லை. ஜெயா டிவியில் பொறுப்பும் தரல, கடைசியா பெண்ணு கேட்டும் கொடுக்கவில்லை தினா. இப்படியாக போன இந்த மோதல், கடைசியா ஒரு அணியாக உருவெடுத்தது. அந்தக் கோபத்தைத்தான் ஜெய் அனல் கக்கியுள்ளாராம்.
மன்னார்குடி வகையறாக்களைப் பொறுத்தவரை சொந்தங்களுக்குள்ளேயே பெண் கொடுத்துப் பெண் எடுப்பதைத்தான் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் திவாவும் உரிமையோடு பெண் கேட்டுப் போயிருக்கிறார். ஆனால், மகளைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டால், அதை வைத்துக்கொண்டு அப்பாவும், மகனும் மகளை வைத்து நமக்கே ஆப்படிப்பார்கள் என தினா கழட்டி விட்டுவிட்டார். என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில். எப்படியோ, பெண் கொடுக்கவில்லை என்பதும் அதிமுகவில் தனி அணி உருவாக ஒரு காரணமாக அமைந்துவிட்டது” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

கருணாநிதிகிட்ட கணக்கு கேட்டு காட்டாததால் தனியாகப் பிரிந்து வந்து ஆரம்பித்த எம்.ஜி.ஆரின் கட்சி எப்படியெல்லாமோ உடைந்து. அனால் ஒரு இப்போது பொண்ணு கொடுக்கவில்லை என்ற காரணத்துக்காக ஒரு அணியா என கழகத் தொண்டர்கள் காண்டாகும் அளவிற்கு மன்னார்குடி குடும்பத்தின் கூத்து அரங்கேறி வருகிறது.
