ஸ்டாலினுக்கு கஷ்டம்! பட், உதயநிதிக்கு உச்சம்: திசை மாறும் துர்காவின் பிரார்த்தனைகள்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாட்களில், தி.மு.க.வுக்கு எதிராக இந்து மக்களை தூண்டிவிடும் செயல்கள் சிலிர்த்து எழுந்தன. இதைக் கவனித்துவிட்ட ஸ்டாலின் ‘ என் மனைவி கோயில்களுக்கு போவார். நான் அவரை தடுப்பதில்லை. தி.மு.க. இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை.’ என்று வாலண்டியராக ஸ்டேட்மெண்டுகளை தட்டினார். 

ஸ்டாலினின் வார்த்தைகள் பொய்யில்லை. அவரது மனைவி துர்கா கோயில் கோயிலாக ஏறி இறங்குகிறார். எல்லாம் எதற்காக?...ஸ்டாலின் தமிழக முதல்வராக வேண்டும் எனும் எண்ணத்தில்தான். ஆனால் இப்போது இந்த விஷயத்தில் சின்ன ட்விஸ்ட். அதாவது இப்போதெல்லாம் துர்கா, தனது கணவருக்கு இணையாக தன் மகனின் அரசியல் எழுச்சிக்காகவும் பிரார்த்திக்கிறார்! என தகவல். 

அறிவாலயத்தின் சீனியர் பகுத்தறிவு பட்சி ஒன்றை ஓரங்கட்டி விசாரித்தபோது “ஆமாங்க உண்மைதான். தளபதியோட ஜாதகத்தை அடிக்கடி பெரிய பெரிய ஜோதிடர்களிடம் கொடுத்து அவரோட கிரக நிலை, முதல்வர் வாய்ப்பு பற்றி கேட்டுட்டே இருப்பாங்க அண்ணி. ஜோதிடர்கள் சொல்ற பரிகாரத்தையும் பக்காவா பண்ணிடுவாங்க. நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் துவங்குறதுக்கு முன்னாடியும் இப்படி ஜோஸியம் பார்த்தாங்க. அப்போ ஒரு முக்கிய ஜோதிடம் ‘உங்க ஆத்துக்காரர் முதல்வராவது கஷ்டப்பட்டு நடக்கலாம். ஆனால் உங்கள் புள்ளையாண்டானுக்கு அந்த யோகம் அமோகமா இருக்குது.’ என்றாராம். உடனே உதயாவின் ஜாதகத்தை எடுத்து, அதை காட்டியிருக்கிறார். அப்போது அந்த ஜோதிடம் கூடுதல் நம்பிக்கை தந்திருக்கிறார். 

இது தளபதிட்ட சொன்னதும் அவரும் ஹேப்பி. இதனாலதான் இந்த தேர்தல் பிரசாரத்துல திடுதிப்புன்னு உதயாவை களமிறங்கி தீவிர பிரசாரம் செய்ய வெச்சு, ஜனரஞ்சக அடையாளத்தை உருவாக்கிட்டாங்க. உதயநிதி தமிழக முதல்வராகணும்னு விதியிருந்தால் அதை யார் மாத்த முடியும்?
அதனாலதான் இப்பல்லாம் அண்ணி எல்லா கோவில்களிலும் தளபதிக்கு வேண்டுதல் வைக்கிற அளவுக்கு தீவிரமா உதயாவுக்காகவும் வேண்டுறாங்க.” என்று நிறுத்தினார். 

இந்த செய்தி ஆளும் தரப்பிலும் பரவ, “அப்ப ஸ்டாலின் தலைகீழா நின்னாலும் முதல்வர் வாய்ப்பில்லைன்னு சொல்லுங்க. வேணும்னா உதயநிதி முதல்வரானதும், அப்பாவை துணைமுதல்வராக்க சொல்லுங்க டம்மியா.” என்று கண்ணடிக்கின்றனர்.