திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது என சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை கூறியுள்ளது. 

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது என சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை கூறியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2ம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதில், சினிமா பிரபலங்களும், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பெரும்பாலனவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கொரோனா அறிகுறி ஏற்பட்டது. பின்னர், பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து, வீட்டிலேயே தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுவந்தார். பின்னர், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மருத்துவர்களின் அறிவுரைப்படி சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில், அவரது உடல்நிலை தொடர்பாக ரேலா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் உடல்நிலை சீராக உள்ளது. கவலைக்கடும் வகையில் துரைமுருகன் உடல்நிலை இல்லை. மருத்துவகுழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.