திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் கடந்த சில நாட்களாக அவ்வப்போது உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இன்று மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, திமுக பொதுச்செயலாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவின் முக்கிய பிரமுகர்கள் அவரது உடல்நலம் குறித்து அவரது குடும்பத்தினர்களிடமும், மருத்துவர்களிடமும் கேட்டறிந்தனர். துரைமுருகன் இன்று மாலை அல்லது நாளை வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
ஜனவரி 4ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மேல்விஷாரம் அப்பல்லோ மருத்துவமனையில் ஏற்கனவே சிகிச்சை பெற்றார். தற்போது அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 16, 2021, 9:50 AM IST