திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுக சார்பில் எதிர்கட்சித் துணைத் தலைவர் துரை முருகன் பேசினார். தொடக்கத்தில் அவர் கண்ணீரை அடக்கியபடி பேச முயற்சிக்கிறேன் என பேச தொடங்கினார்.

கருணாநிதி குறித்து அவர் பேச பேச துரை முருகன் கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது. தனக்கும் கருணாநிதிக்கும் இடையிலான உறவு குறித்து அவர் நா தழுதழுக்க பேசினார்.

கருணாநிதி உடல் மீது நான் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதே என அவர் கூறும்போது கதறி அழுதார். அவரை ஸ்டாலின் ஆறுதல் படுத்தி அரர வைத்தார். அப்போது திமுக எம்எல்ஏக்களின் கண்களில் கண்ணீர் பெருக்கொடுத்து ஓடியது.

இதே போல் அமிதுக எம்எல்ஏக்களின் கண்களிலும் குறிப்பாக அதிமுக பெண் எம்எல்ஏக்களும் கண் கலங்கினர். கிட்டத்தட்ட  சபை முழுவதும் நிசப்தத்தால் நிறைந்திருந்து. பெரும்பாலான உறுப்பினர்கள் உயர்ந்நிவசப்பட்ட நிலையில் இருந்தனர்.