ரெய்டு நடந்து வரும் நிலையில் 200 மற்றும் 50 ரூபாய் தாள்களுடன் போஸ் கொடுக்கும் திமுக திமுக பொருளாளர் துரை முருகனின் மகனும் வேலூர் தொகுதி மக்களவை வேட்பாளருமான கதிர் ஆனந்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
ரெய்டு நடந்து வரும் நிலையில் 200 மற்றும் 50 ரூபாய் தாள்களுடன் போஸ் கொடுக்கும் திமுக திமுக பொருளாளர் துரை முருகனின் மகனும் வேலூர் தொகுதி மக்களவை வேட்பாளருமான கதிர் ஆனந்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது. 
வேலூர் தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில் ஐடி ரெய்டு துரைமுருகனை அதிர வைத்துள்ளது. மார்ச் 30ம் தேதி தொடங்கிய ரெய்டு அத்தோடு முடிந்து விட்டதாய் நினைத்து நிம்மதியாய் இருந்து துரைமுருகனை நேற்று இரவு வந்த வருமான வரித்துரையினர் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டனர். உள்ளே நுழையவிடாமல் அவரது ஆதரவாளர்கள் திரண்டு தடுத்தாலும், துரைமுருகன் ஆடிப்போய் விட்டார். எல்லா விஷயங்களையும் எளிதாக எடுத்துக் கொண்டு பிறரை நக்கலடிக்கும் துரைமுருகன் பதற்றத்துடன் அதிர்ந்து போய் என்ன செய்வதென்றே தெரியாமல் திகிலடைந்து இருக்கிறார்.

முதல்நாள் சோதனையில் பெரிதாக பணம் எதுவும் கிடைக்கவில்லை. 10 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்தது. இன்று அதிகாலை வேலூர், காட்பாடியில் உள்ள துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான சிமெண்ட் குடோனில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 10 கோடி ரூபாய் வரை கைப்பற்றப்பட்டது. அந்த பொட்டலங்களில் 200 ரூபாய் நோட்டுகள் இருந்தன. 
அதில் வேலூர் வார்டு விவரங்கள் குறித்து எழுதிய சீட் ஒன்றும் சிக்கியது. இந்த பணம் கைப்பற்றப்பட்ட சில நிமிடங்களில் மற்றொரு டீம், வேகமாக கதிர் ஆனந்தின் கிங்ஸ்டன் கல்லூரிக்கு படை எடுத்தனர். அடுத்து துரைமுருகனின் ஆதரவாளர்கள், உதவியாளர்கள், நெருக்கமானவர்கள் என அத்தனை ஏரியாக்களிலும் ரவுண்டு கட்டிய ஐடி அதிகாரிகள் அலசி ஆராய்ந்து வருகிறார்கள். இந்நிலையில் கதிர் ஆனந்த் கட்டுக்கட்டாக 200 ரூபாய், 50 ரூபாய் நோட்டுக்களை கையில் வைத்த படி போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
