திமுக பொருளாளார் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் நடத்தும் கல்லூரியில் வருமான வரித்துறையினர் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை சோதனை நடத்தினர். இந்த சோதனை குறித்து துரைமுருகன்  செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது எங்கள் வீட்டுக்கு திடீரென சிலர் வந்தனர். யாருன்னு தெரிந்தால் தானே அனுமதிக்க முடியும். வருமான வரித்துறையினர் என்று அறிந்ததும் அனுமதித்தோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் இது சோதனைக்கான காலமல்ல. நாங்கள் மட்டுமல்ல அனைத்து அரசியல் கட்சிகளுமே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்., தேர்தலில் மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம் என கூறினார்.

ஆனால் . எங்கள் வீட்டிற்கு திடீரென வந்தது ஏன் ? எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால், களத்தில் எங்களை எதிர்க்க திராணியற்ற கடைந்தெடுத்த அரசியல்வாதிகள் செய்த சூழ்ச்சி. நேருக்கு நேர் எதிர்க்க முடியாமல் எங்கள் முதுகில் குத்த பார்க்கின்றனர் என்று காட்டமாக தெரிவித்தார்

..

வருமானவரித்துறையினரை வைத்தோ அல்லது வேறு சில அமைப்புகளை வைத்தோ மிரட்டுவதன் மூலம் எங்களை பணியவைக்க முடியாது. நாங்கள் மிசாவை பார்த்தவர்கள், அடக்குமுறையை பார்த்தவர்கள் என்றார்.