அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு தூக்குக்கயிறு மற்றும் விஷம் கொடுத்து உதவ தயார் என டிடிவி ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். 

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. இதனால் அதிமுக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. 

மத்திய அரசும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத காலம் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. 

இதனிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் குறைந்தபட்சம் அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

அதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவிட்டால் அதிமுக எம்பிக்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள தயார் என்று நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். தற்கொலை செய்து கொள்வதற்கு தேவையான உதவிகளை செய்ய தயார் என தெரிவித்தார்.