Asianet News TamilAsianet News Tamil

மூழ்கும் தி.மு.க.வுக்கு முட்டுக் கொடுக்கப்போகும் அ.தி.மு.க. அமைச்சர் யார்?!

தி.மு.க. ஒரு மூழ்கும் கப்பல். அங்கே சென்று சேர்ந்திருக்கும் செந்தில்பாலாஜியால் இஞ்சின் பாதிப்படையாமல் பார்த்துக் கொள்வது நல்லது!: என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

Drowning DMK
Author
Chennai, First Published Dec 16, 2018, 3:31 PM IST

* என் மனதில் இருந்த இருளை அகற்றி வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளது உதயசூரியன்!: என்று அ.ம.மு.க.வின் முன்னாள் அமைப்பு செயலாளர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். (நெசமாவாண்ணே! அம்மா ஆட்சியில அமைச்சரா இருந்தப்பவும், கருங்கும்முன்னு  இருட்டு அப்பிப்போயிதான் கெடந்தீகளா? அச்ச்ச்ச்சச்ச்சோ அய்யோ பாவம்ணே நீங்க.)

* தி.மு.க. ஒரு மூழ்கும் கப்பல். அங்கே சென்று சேர்ந்திருக்கும் செந்தில்பாலாஜியால் இஞ்சின் பாதிப்படையாமல் பார்த்துக் கொள்வது நல்லது!: என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். (எவ்ளோ கரிசமனா இருக்கீங்க தல! நீங்கதான் கடல் சுறாவாச்சே, மூழ்குறப்ப முட்டுக் கொடுத்து தூக்கிட வேண்டிதானே!)

* செந்தில்பாலாஜி சொல்வதெல்லாம் வேதவாக்கு அல்ல. இங்கே காலாவதியானவர், வெளியே சென்று பேசுவதெல்லாம் உண்மையாகாது. ஏற்கனவே அவர் தி.மு.க.வுடன் தொடர்பில் இருந்தார், இப்போது முழுமையாக அங்கே சென்றுவிட்டார்: என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். (தி.மு.க. கூட அவர் தொடர்புல இருந்தப்பவே அதை வெளிப்படையா நீங்க சொல்லாதது என்? அப்படிங்கிறதுதான் பல பேரோட டவுட்டுண்ணே.)

* தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கின்றன. காங்கிரஸின் வெற்றி, ராகுல் தலைமைக்கு கிடைத்துள்ள பரிசு: என்று சோனியா காந்தி பெருமையாக கூறியுள்ளார். (மேடம், அதே நேரத்துல தமிழ்நாட்டுல உங்க கட்சி நிர்வாகி பீட்டர் அல்போன்ஸு ‘இதுவே மோடியை தோற்கடிக்க போதுமான பலமா?ன்னு சந்தேகமாக இருக்குது.’ன்னு பேசியிருக்கிறாரே இதுக்கும் ஒரு விளக்கத்தை தட்டிவிடுங்களேன்.)

* வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அ.திமு.க.வுக்கு தமிழ்நாட்டுல ஒரு தொகுதியில் கூட டிபாசிட் கிடைக்காது!: என்று மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் சபித்துள்ளார். (அவங்களாச்சும் 40 தொகுதியிலும் தேர்தல்ல நின்னு, பிரசாரம் பண்ணி, ரிசல்ட் வந்த பிறகுதான் டிபாசிட் பத்தி தெரிய வரும். ஆனா உங்களுக்கோ கூட்டணியில நாலு சீட் கூட கிடைக்காத நிலைமை இருக்குதே தல, இந்த சோகத்தை எங்கே போய் சொல்ல?)

Follow Us:
Download App:
  • android
  • ios