Asianet News TamilAsianet News Tamil

சூரிய கிரகணத்தின் போது சாப்பிட கூடாதா? மூடநம்பிக்கையை ஒழிக்க சிற்றுண்டி ஏற்பாடு செய்த திராவிடர் கழகம்!!

கிரகண மூடநம்பிக்கையை ஒழிப்பதற்காக, திராவிடர் கழகத்தின் சார்பில் கர்ப்பிணி பெண்கள் சிற்றுண்டி சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

dravidar kazhagam organized a snack to eradicate superstition about solar eclipse
Author
First Published Oct 25, 2022, 6:06 PM IST

கிரகண மூடநம்பிக்கையை ஒழிப்பதற்காக, திராவிடர் கழகத்தின் சார்பில் கர்ப்பிணி பெண்கள் சிற்றுண்டி சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சூரிய கிரகணம் இன்று 1 மணி 45 நிமிடங்கள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதன்படி சூரியகிரகணம் மாலை 5.11 மணியளவில் தொடங்கி, 6.27 மணி வரையில் நிகழவுள்ளது. குஜராத்தின் துவாரகா நகரில் அதிகபட்சமாக 1 மணிநேரம் 45 நிமிடங்களும், மும்பையில் 1 மணிநேரம் 19 நிமிடங்களும், சென்னையில் சூரிய கிரகணம் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தீபாவளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொல்லாதது ஏன்? ஆர்.பி.உதயகுமார் கேள்வி!!

இதை அடுத்து கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பாா்க்கக்கூடாது என்றும் கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்தும் பாா்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சூர்ய கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது, கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக்கூடாது என்றெல்லாம் கூறுவது வழக்கம்.

இதையும் படிங்க: பயங்கரவாதத்திற்கு திமுக அரசு இடம் கொடுத்துவிடக் கூடாது.. விலையை கொடுக்க நேரிடும்.. எச்சரித்த வானதி.

இந்த நிலையில் கிரகண மூட நம்பிக்கை ஒழிக்க திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் திடலில் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றுள்ளனர். இது குறித்து பேசிய திராவிட கழகம், 2019 ஆம் ஆண்டு சூரிய கிரகணத்தன்று நடந்த நிகழ்வில், கர்ப்பிணியாக பங்கேற்ற சீர்த்தி என்ற பெண்ணுக்கு 2020 ஜூன் மாதத்தில் ஆண் குழந்தை பிறந்து, தற்போது இருவரும் நலமாகவே உள்ளனர் என்று தெரிவித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios