தமிழகத்தில் பா.ஜ.கவை படுதோல்வி அடைய வைத்ததுமின்றி, கடந்த இரு தினங்களாக #TNRejectsBJP என்ற ஹேஷ் டேக் அகில இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகிவரும் நிலையில் தான் நேற்று கண் கலங்கி அழுததாக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை ட்விட் வெளியிட்டுள்ளார்.

தமிழக பா.ஜ.க என்ற ட்விட்டர் கணக்கில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பேட்டி என்கிற பெயரில்,...எனது முதல் பணியே கோதவரியையும் கிருஷ்ணா நதி நீரையும் இணைத்து தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவருவதுதான்’ ஒரு செய்தி வெளியிடப்பட்டு இதுதான் பா.ஜ.க. தமிழகமே நீ எவ்வளவு நிராகரித்தாலும் பா.ஜ.க. தன் கடமையைச் செய்யும் என்ற புல்லரிப்பான செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இச்செய்தியைப் படித்ததும்தான் ஓவராக உணர்ச்சி வசப்பட்டு அழுதிருக்கிறார் தாமரை மலரும் தமிழிசை. இது குறித்து வெளியிட்ட அவரது ட்விட்டர் பதிவில்,...Dr Tamilisai Soundararaja@DrTamilisaiBJP,..நேற்று இரவு என் கண்களில் கண்ணீர். தோற்றுவிட்டோம் என்பதற்காக அல்ல. ஆங்கில தொலைக்காட்சியில் நேற்று நள்ளிரவில் எங்கள் அமைச்சரின் பேட்டியை கேட்டதும்... ஒரு எம்பியைகூட தரமறுத்துவிட்ட தமிழகத்திற்கு தண்ணீர் தருவதுவதுதான் இந்த ஆட்சியின் முன்னுரிமை என்று பேசியத்தைக்கேட்டதும் ஆனந்தக்கண்ணீர் !! என்று பதிவிட்டிருக்கிறார். ஓ இந்த அழுகை வேற டிபார்ட்மெண்டா மேடம்?