Asianet News TamilAsianet News Tamil

அதிமுக கூட்டணியில்தான் இருக்கோம்... ஆனா, 6 மாதங்கள் கழித்து கூட்டணி முடிவு... மதில் மேல் பூனையாக ராமதாஸ்!

"அதிமுக கூட்டணியில் பாமக தொடர்ந்து நீடித்துவருகிறது. இந்தக் கூட்டணி தொடரும். தற்போதுள்ள அதிமுக அரசு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொடர்ந்து நல்ல திட்டங்களை செயல்படுத்தும்” என்று ராமதாஸ் தெரிவித்தார்.

Dr.Ramadoss says that he will decide alliance after 6 months
Author
Thiruvannamalai, First Published Mar 6, 2020, 10:20 PM IST

தேர்தல் கூட்டணி குறித்து ஆறு மாதம் கழித்துதான் முடிவெடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.Dr.Ramadoss says that he will decide alliance after 6 months
புதிதாக ரஜினி தொடங்க உள்ள கட்சியுடன் பாமக கூட்டணி வைக்கும் என்று ரஜினியின் ஆலோசகர் தமிழருவி மணியன் தெரிவித்திருந்தார். இதற்குப் பதில் அளித்த டாக்டர் ராமதாஸ், ‘ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்’ என்று பட்டும்படாமல் பதில் அளித்தார். என்றபோதும் சட்டப்பேரவைத் தேர்தலை ரஜினியுடன் பாமக இணைந்து சந்திக்கப் போவதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகிவருகின்றன. இன்னொரு புறம் சட்டப்பேரவைத்தேர்தலில் பாமக 80, 90 இடங்களில் வெல்ல வேண்டும் என்றும் ராமதாஸ் பேசிவருகிறார்.

Dr.Ramadoss says that he will decide alliance after 6 months
இந்நிலையில் திருவண்ணாமலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். “பாமக 234 தொகுதிகளிலும் கட்சியைப் பலப்படுத்தி வருகிறது. சட்டப்பேரவைத்  தேர்தல் கூட்டணி குறித்து ஆறு மாதம் கழித்துதான் முடிவெடுக்கப்படும். அதிமுக கூட்டணியில் பாமக தொடர்ந்து நீடித்துவருகிறது. இந்தக் கூட்டணி தொடரும். தற்போதுள்ள அதிமுக அரசு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொடர்ந்து நல்ல திட்டங்களை செயல்படுத்தும்” என்று ராமதாஸ் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios