Asianet News TamilAsianet News Tamil

சென்னை சாலைகளில் காக்கா, குருவிகள் கூட இல்லை... இரு வாரங்களில் கொரோனாவை விரட்டிடலாம்.. ராமதாஸ் நம்பிக்கை!

"சென்னையில் இதற்கு முன் நடைமுறையில் இருந்த 4 ஊரடங்குகளிலும் இதே ஒத்துழைப்பு கிடைத்திருந்தால் சென்னையில் இன்று கொரோனா இருந்திருக்காது. இப்போது கிடைக்கும் ஒத்துழைப்பு இன்னும் இரு வாரங்களுக்கு தொடரட்டும். அவ்வாறு தொடர்ந்தால் கொரோனா வைரசை ஒழித்து விடலாம்!” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Dr. Ramadoss appreciate chennai people
Author
Chennai, First Published Jun 21, 2020, 9:21 PM IST

மூன்றாவது நாளாக இன்றும் சாலைகளில் காக்கா, குருவிகளைக் கூட காணவில்லை என்றும் ஊரடங்கை முழுமையாகக் கடைபிடிக்கும் மக்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். Dr. Ramadoss appreciate chennai people
வேகமாகப் பரவும் கொரோவா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஜூன் 19 முதல் 30 வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையான ஜூன் 21, 28 ஆகிய தேதிகளில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்தது. இந்த உத்தரவால் இன்று இந்த நான்கு மாவட்டங்களிலும் முழுமையான ஊரடங்குக் கடைப்பிடிக்கப்படுவதைக் காண முடிந்தது.Dr. Ramadoss appreciate chennai people
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே ஊரடங்கை கட்டுக்கோப்பாகப் பின்பற்றும்படி மக்களிடம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது இந்த 4 மாவட்டங்களில் மக்கள் முழுமையாகக் கடைபிடிக்கும் ஊரடங்குக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “அரசாங்கத்தின் ஆதரவுடன் முழு அடைப்பு நடத்தினால்கூட, இல்லாத அளவுக்கு சென்னை இன்று முடங்கிக் கிடக்கிறது. மூன்றாவது நாளாக இன்றும் சாலைகளில் காக்கா, குருவிகளைக் கூட காணவில்லை. கொரோனா ஒழிப்புக்கான பணிகளை இப்போது மக்களே முன்னெடுக்கிறார்கள். பாராட்டுகள்!Dr. Ramadoss appreciate chennai people
சென்னையில் இதற்கு முன் நடைமுறையில் இருந்த 4 ஊரடங்குகளிலும் இதே ஒத்துழைப்பு கிடைத்திருந்தால் சென்னையில் இன்று கொரோனா இருந்திருக்காது. இப்போது கிடைக்கும் ஒத்துழைப்பு இன்னும் இரு வாரங்களுக்கு தொடரட்டும். அவ்வாறு தொடர்ந்தால் கொரோனா வைரசை ஒழித்து விடலாம்!” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios