முன்னணி இணையத்தளம் ஒன்றிற்கு பேட்டியளித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, இந்த திராவிடத்தால் தான் தமிழகமே கெட்டுப் போச்சு, திராவிடத்துக்கு சரியான விளக்கம் கொடுக்க முடியுமா என சாராமரிக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவர்கள் எல்லாவற்றிற்குமே திராவிடம் என்பது மொழி சார்ந்ததா? இனம் சார்ந்ததா? திராவிடம்ன்னு ஏதாவது மொழி இருக்கிறதா? தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் எத்தனை நாளைக்கு இப்படி ஏமாத்துவீங்க? ஆரியம் திராவிடம்ன்னு எதை சொல்கிறீர்கள். நீங்கள் பிராமிணர்களை மட்டும் எதிர்த்து அரசியல் செய்கிறீர்கள்.
ஆரியர்கள் எல்லோரும் பிராமிணர்களா? இல்ல பிராமணர் எல்லோரும் ஆரியர்களா? உங்களுடைய ஆதாரம் என்ன? ஜீன் ரீதியாக சொல்கிறீர்களா? திராவிடத்திற்கு சரியான ஆதாரம் உங்களால் கொடுக்க முடியாத போது எப்படி உங்களால் ஆரியம் இதுதான் என மறுக்கமுடியாத கொடுக்க முடியும்? அப்படி உங்களால் கொடுக்கமுடியாது என அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டுள்ளார்.
தமிழை காப்பாற்றுவதாக நயவஞ்சகமான நாடகமாடி தமிழைப்பெயரளவிலேயே பாதுகாப்பு அரணாக வைத்துக்கிண்டு சமூகத்தை சிதைத்து கொள்ளையடித்தது மட்டுமே திராவிடக் கட்சிகளின் சாதனைகள் என சொன்ன கிருஷ்ணசாமியின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக இணையதளத்தில் பலரும் சரமாரியாக விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
இத்தனை நாள் திராவிட கட்சிகளோட கூட்டணி. பெற வேண்டிய சலுகைகளைப் பெற்றுக்கொண்டு தன்னையும் தன் குடும்பத்தினரையும் உயர்த்திக்கொண்டு தன்னினத்தைச் சார்ந்த மற்றவர்கள் எல்லாம் தமக்கு கீழேயே வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மலிவான அரசியல் வியாபாரி என திட்டித் தீர்க்கின்றனர்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 26, 2019, 3:41 PM IST