1980 இல் கலைஞரை எதிர்த்த எச்.வி .ஹண்டே...!  ஆனால் இன்று காவேரியில் தீவிர சிகிச்சை அளிப்பது அவரே.....

காவேரி  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு  உள்ள  கலைஞாருக்கு சிகிச்சை அளித்து வருகிறார் எச்.வி .ஹண்டே

கலைஞருக்கு ஏற்பட்டு உள்ள சிறுநீரக தொற்று நோய் மற்றும் தொடர்ந்து இருந்த காய்ச்சல்  காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது.

தற்போது 8  மருத்துவர்கள் கருணாநிதிக்கு தீவிர  சிகிச்சை அளித்தனர். அதில் பிரபல மருத்துவரான எச். வி.  ஹண்டே  காவேரி மருத்துவமனையில் கலைஞருக்கு நேற்று முதல் சிகிச்சை அளித்து வருகிறார் .

அதிமுக  வை சேர்ந்த  எச்.வி ஹண்டே

இவர் ஒரு மருத்துவர் மட்டுமல்ல....அரசியல் வாதியும் கூட ....1971  ஆம் ஆண்டு  சுதந்திரா கட்சிக்காக  தேர்தலில்  நின்றவர் தான்  இவர் .அதிமுக  வின் முக்கிய நபரான இவர், எம் ஜிஆர்  அமைச்சரவையில்  சுகாதாரத்துறை அமைச்சராக  இருந்துள்ளார். பின்னர் பாஜகவிலும் இருந்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

1980 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், அண்ணாநகர்  தொகுதியில் கருணாநிதிக்கு எதிராக போட்டியிட்டு அவர் தோல்வியை தழுவினார்

ம் ஜி ஆருக்கும் சிகிகாஹி அளித்த  ஹண்டே ...!

எம்ஜிஆருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் போது, அவருடன் இருந்து கவனித்துக் கொண்டவர் தான்  ஹண்டே. பின்னர்  கடந்த ஆண்டு ஜெயலலிதா  அப்போல்லோ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை அளிக்கப் பட்டு வந்த போது, மருத்துவ ஆலோசனைகளை  வழங்கியர் தான்  எச். வி ஹண்டே.

இந்நிலையில் தற்போது, கருணாநிதிக்கும் சிகிச்சை அளித்து வருகிறார் எச். வி ஹண்டே  என்பது குறிப்பிடத்தக்கது.