dr ambedkar 127th birthday celebrations
டாக்டர் அம்பேத்கரின் 127 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவிற்கு அரசியல்கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோயம்பேட்டில் உள்ள அம்பேத்காரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விடுதலை சிறுத்தை கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் அதிமுக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், சமத்துவ கட்சித்தலைவர் சரத்குமார், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
