Asianet News TamilAsianet News Tamil

அடக்கு முறைகளுக்கு பயந்து ஐபிஎல் பார்க்கப் போறீங்களா ? தடையைத் தாண்டி தமிழன்னா யாருன்னு காட்டுவோம்… குமுறிய ஜி.வி.பிரகாஷ்….

Dont see IPL cricket in chennai told g.v.prakash
Dont see IPL cricket in chennai told g.v.prakash
Author
First Published Apr 10, 2018, 6:50 AM IST


அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி  ஐபிஎல் கிரிக்கெட்  போட்டிகளை ரசிக்க போறிங்களா? அல்லது விளையாட்டைத் தவிர்த்து தமிழன்னா யாருன்னு காட்டப் போறீங்களா ? என்று இசையமைப்பாளா் ஜி.வி.பிகாஷ் தனது  ட்விட்டர் பக்கத்தில் பொங்கித் தீர்த்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினா் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தமிழக விவசாயிகளின் போராட்டத்தை கண்டு கொள்ளாத மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பைப் வெளிப்படுத்துக் வகையில்   இளைஞா்கள்  சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினா் வலியுறுத்தி வருகின்றனர்.

Dont see IPL cricket in chennai told g.v.prakash

அமைச்சர் ஜெயகுமார், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் ஐபிஎஸ் போட்டிகளை சென்னையில் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். ஆனால் சென்னையில் போட்டிகள் நடந்தே தீரும் என ஐபிஎல் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்

அதே நேரத்தில் ரசிகா்கள் செல்போன், தண்ணீா் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்லக் கூடாது என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இசையமைப்பாளா்  மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் ட்விட்டர் பக்கத்தில் , அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி  ஐபிஎல் கிரிக்கெட்  போட்டிகளை ரசிக்க போறிங்களா? அல்லது விளையாட்டைத் தவிர்த்து தமிழன்னா யாருன்னு காட்டப் போறீங்களா ?  என பதிவிட்டுள்ளார்.

சுதந்திரமா உன் கருத்தை சொல்லமுடியலன்னா விளையாட்டை தவிர்க்க போறியா..?? தடைய தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப்போறியா..? என கொந்தளித்து தனது கண்டனத்தைத் பதிவு தெரிவித்துள்ளார்.

Dont see IPL cricket in chennai told g.v.prakash

Follow Us:
Download App:
  • android
  • ios