குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெங்கய்யா நாயுடு நிறுத்தப்பட்டிருப்பது தென் மாநிலங்களுக்கு பெருமை என்றும், இந்த தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன், எதையும் ஜாதிக் கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது என தெரிவித்தார்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக வெங்கய்யா நாயுடு அறிவிக்கப்பட்டார். இது குறித்து கருத்துத் தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், குடியரசுத் தலைவர் வேட்பாளராக தலித் ஒருவரை அறிவித்துவிட்டு, தற்போது குடியரசுத் துணைத் தலைவராக வெங்கய்யா நாயுடுவை அறிவித்திருப்பதில் பாஜகவின் சதி உள்ளதாக தெரிவித்தார்.

ராம்நாத் பெயருக்கு ஜனாதிபதியாக இருப்பார் என்றும் அவரின் அனைத்து வேலைகளையும் வெங்கய்யா நாயுவே பார்ப்பார் என்றும் தெரிவித்திருந்தா.

இதற்கு பதில் அளித்துப் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ராம்நாத் வேலையை அவர் பார்ப்பார், வெங்கய்யா நாயுடு அவர் வேலையை பார்ப்பார் என்று தெரிவித்த அவர், இதில் ஜாதி எங்கே வந்ததது ? என கேள்வி எழுப்பினார்.

திருமாவளவன் இனிமேல் எதையும் ஜாதிக் கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது  என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் என்றும் தெரிவித்தார்.